Back
வழிபாட்டுத் தலம்
திருக்காவளம் பாடி கோபாலகிருஷ்ணப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருக்காவளம் பாடி கோபாலகிருஷ்ணப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் திருக்காவளம் பாடி
ஊர் திருக்காவளம்பாடி
வட்டம் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் கோபாலகிருஷ்ணன்
தாயார் / அம்மன் பெயர் மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்
திருக்குளம் / ஆறு தடமலர்ப் பொய்கை
வழிபாடு நான்கு கால பூசை
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பாண்டிய, சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர்
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட தலம்.
சுருக்கம்
துவாரகாபுரியிலிருந்து கண்ணபிரான் சத்தியபாமாவுடன் இங்கு வந்ததால் இது துவாரகைக்குச் சமமான ஸ்தலம். காவளம் என்னும் சொல்லிற் கொப்ப அழகிய பொழில்கள் சூழ்ந்து துவாரகாபுரியைப் போலவே செழித்து திகழ்கிறது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரின் அவதார ஸ்தலமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு ததீயாராதனம் (அன்னதானம்) நடத்திய மங்கை மடம் இந்த ஸ்தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது. திருநாங்கூரின் கருட சேவைக்கு இந்த துவாரகாபுரி நாதனும் எழுந்தருள்வார். இங்கு நாச்சியாரின் திருநாமம் இனிக்கும் தமிழ்ச் சொல்லான “மடவரல் மங்கை” என்பதாகும். இதனைத் திருமங்கையாழ்வார், “படவரவுச்சி தன் மேல் பாய்ந்து பல்நடங்கள் செய்து மடவரல் மங்கை தன்னை மார்வகத் திருத்தினானே“ என்று தம்பாடலில் எழுத்தாண்டுள்ளார். சத்தியபாமாவுக்காக கண்ணன் இந்திரலோகத்திலிருந்து பாரி ஜாத மலரைக் கொணர்ந்ததை பெரியாழ்வார் நினைவு கூர்கிறார்.
திருக்காவளம் பாடி கோபாலகிருஷ்ணப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருநாங்கூர்
செல்லும் வழி ‘திருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்று சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் திருநகரியிலிருந்தும் நடந்தே வரலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை
திருக்காவளம் பாடி கோபாலகிருஷ்ணப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருக்காவளம்பாடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி சீர்காழி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 25 Sep 2017
பார்வைகள் 123
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்