Back
வழிபாட்டுத் தலம்
அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் ஆனாங்கூர் சிவன் கோயில்
ஊர் ஆனாங்கூர்
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் அகத்தீசுவரர்
தாயார் / அம்மன் பெயர் சௌந்தரநாயகி
திருவிழாக்கள் பிரதோஷம், சிவராத்திரி
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / உத்தமசோழன்
கல்வெட்டு / செப்பேடு உத்தமசோழர் காலக் கல்வெட்டுகள் விமானத்தின் தாங்குதளத்தில் காணப்படுகின்றன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் முகமண்டபத்தின் தென்புறச்சுவரின் கிழக்கு மூலையில் விநாயகர் காணப்படுகிறார். அடுத்து இரண்டாவது கோட்டத்தில் அகத்தியரும் மூன்றாவது கோட்டத்தில் சிதிலமடைந்த நடராஜரும் காணப்படுகின்றனர். கருவறையின் தென்பகுதிக் கோட்டத்தில் புன்னகையுடன் தட்சிணாமூர்த்தி எழிலாக அமர்ந்திருந்தார். மேற்சொன்ன அமைப்பிலேயே கருவறையின் மேற்குப் பகுதியில் லிங்கோத்பவரும் வடக்குப் பகுதியில் பிரம்மாவும் எழிலுடன் அமைந்துள்ளனர். இம்மூன்று கோட்டங்களிலும் மகரதோரணங்களும் காட்டப்பட்டுள்ளன. முகமண்டப வடக்குச் சுவரில் உள்ள கோட்டங்களில் பிச்சாடனர், துர்க்கை, மற்றும் அம்மையப்பர் காட்சி அளிக்கின்றனர். கோயிலை அடுத்து உள்ள மரத்தடியில் ஒரு சேட்டை தேவியின் சிலையும் உள்ளது.
தலத்தின் சிறப்பு 1100 ஆண்டுகள் பழமையானது.
சுருக்கம்
ஆனாங்கூர் அகத்தீசுவரர் கோயில் முற்காலச் சோழ அரசருள் ஒருவரான கண்டராதித்திச் சோழனின் மனைவியார் செம்பியன் மாதேவியாரால் கற்றளியாக்கப்பட்டது. எழில்மிகு இக்கற்றளி சோழர் கலைப்பாணிக்கு சான்றாகத் திகழ்கிறது.
அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயிலின் கட்டமைப்பு ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டம் மற்றும் பட்டிகை பெற்றுப் பாதபந்தத் தாங்குதளமாக அமைந்துள்ளது. முகமண்டபத்திலிருந்த இந்த மூன்று கோட்டங்களிலும் நான்முக அரைத்தூண்கள் அணைவு பெற்றிருந்தன. முகமண்டபம் முடிவுபெற்று கருவறைப்பகுதி ஆரம்பமாகிறது. முகமண்டபக் கோட்டத்தில் இருமருங்கிலும் நான்முக அடிப்பாகம் கொண்ட விஷ்ணுகாந்தத் தூண்கள் உள்ளன. தூண்களின் மேற்பகுதியான வீரகண்டத்திற்குமேல் பட்டையுடன் கூடிய குளவுத் தரங்கப்போதிகைகள் உள்ளன. போதிகைகள் தாங்கும் உத்திரத்திற்கு மேல் வாஜனமும் அதற்குமேல் வலபியும் கூரையும் அமைந்துள்ளன. வலபியில் பூதவரிகள் அழகுடன் காட்டப்பட்டுள்ளன. கூரைப்பகுதி முன்னிழுக்கப்பட்டுக் கபோதமாகக் காட்டப்பட்டுக் கூடுகள் அமைந்துள்ளன. இக்கபோதத்திற்குமேல் பூமிதேசம் காட்டப்பட்டு முதல்தளம் முடிவடைகிறது. அடுத்து சிமெண்ட் தளமாக இரண்டாம் தளம் மற்றும் விமானம் உயருகிறது. விமானத்தின் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கில் சதுரக்கட்டுக் கொண்ட விஷ்ணுகாந்தத் தூண்கள் கொண்டு இரண்டு கர்ணபத்திகளும் ஒரு சாலைப்பத்தியும் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருமணஞ்சேரி, திருவாவடுதுறை
செல்லும் வழி குத்தாலத்திலிருந்து 2 கி.மீ.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 -12.00 முதல் மாலை 4.00-8.00 வரை
அருள்மிகு அகத்தீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் ஆனாங்கூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி மயிலாடுதுறை விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் American Institute of Indian Studies
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் American Institute of Indian Studies
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 03 Sep 2018
பார்வைகள் 71
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்