வழிபாட்டுத் தலம்
அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சிவன் குடைவரைக் கோயில் |
| ஊர் | அரிட்டாப்பட்டி |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | அரிட்டாப்பட்டி சிவன் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் தாய்ப்பாறையில் இலிங்கவடிவில் இறைவன் உள்ளார். முகமண்டபத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. முகமண்டபத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் உள்ள கோட்டங்களில் இலகுலீசரும், கணபதியும் உள்ளனர். வெளிப்புறத்தில் நந்தி அமைந்துள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் காட்டுகின்றது. |
|
சுருக்கம்
அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் கழிஞ்சமலையில் உள்ளது. இம்மலையின் பழம்பெயர் திருப்பிணையன் மலை என்பதாகும். இம்மலையின் மேற்குப்பகுதியில் ஓர் அழகிய குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. இது சிவபெருமானுக்காக கி.பி.8-ஆம் நூற்றாண்டில் முற்காலப் பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். ஒரு சிறிய கருவறையும், அழகிய முன் மண்டபத்தையும் கொண்டு விளங்குகிறது. இயற்கையான பாறையிலிலேயே உருவாக்கப்பட்ட இலிங்கம் கருவறையில் உள்ளது. மண்டபத்தில் முன்வரிசையில் மட்டும் இரண்டு தூண்களும், இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. இக்கோயில் இன்று இவ்வூர் மக்களால் “இடைச்சி மண்டபம்“ என்று அழைக்கப்படுகின்றது. குடைவரைக் கோயிலின் வெளிப்புறச் சுவரில் விநாயகர், லகுலீசர் சிற்பங்கள் வெட்டப்பட்டுள்ளன. தென்னகத்தில் காணப்படும் ஒரு லகுலீசர் சிற்பங்களில் இது மிக முக்கியமானது எனலாம்.
|
|
அரிட்டாப்பட்டி சிவன் குடைவரைக் கோயில்
| கோயிலின் அமைப்பு | குடைவரைக்கோயில் இது. ஒரு சிறிய அழகிய கருவறையையும் முகமண்டபத்தையும் கொண்டுள்ளது. கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். மூலவர் மலையின் பாறையிலிருந்தே வடிக்கப்பட்டுள்ளார். நுழைவுவாயிலில் இலகுலீசரும், கணபதியும் அமைந்துள்ளனர். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மாங்குளம் தமிழ்ப்பிராமிக் கல்வெட்டுகள், அரிட்டாப்பட்டி பிராமிக் கல்வெட்டு, வரிச்சியூர் குடைவரைக் கோயில்கள் |
| செல்லும் வழி | மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டி என்னும் சிற்றூரின் மேற்கில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 1407 |
| பிடித்தவை | 0 |