வழிபாட்டுத் தலம்
தொட்டப்ப நாயக்கனூர் சிவன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | தொட்டப்ப நாயக்கனூர் சிவன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | சிவன் |
| ஊர் | தொட்டப்ப நாயக்கனூர் |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| உட்பிரிவு | 1 |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.17-ஆம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | சிவன் கோயிலில் கருவறை புறச் சுவரிலும், அர்த்த மண்டப புறச் சுவரிலும் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. கிழக்கில் விநாயகர், மயில் மேல் அமர்ந்த முருகன், தெற்கில் கால் மாறி ஆடிய நடராஜர், காளி, மோகினி, ஆனையுரித்த பிரான் ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன. மேற்கில் அக்னி வீரபத்திரரும், அகோர வீரபத்திரரும் உள்ளனர். வடக்கில் காளி, பிட்சாடனர், வீரப் பெண், விஷ்ணு ஆகிய சிற்பங்களும், தாங்குதளத்தில் சிங்கத்துடன் விளையாடும் வீரன் உருவமும், கன்றினை தோளில் போட்டுக் கொண்டு நிற்கும் வீரன் உருவமும், குட்டியை அடிவயிற்றில் தாங்கும் குரங்கும் அமைந்துள்ளன. அம்மன் கோயிலில் வீரபத்திரர், கண்ணப்பர், இலிங்கத்தை வழிபடும் பசு, தேவி, இடபாரூடர், தவம் செய்யும முனிவர், அடியவர், பாம்பாட்டி, மோகினி, விஷ்ணு, திருவரங்கன், இலிங்க பூசை செய்யும் யானை, காளிங்க நர்த்தனம், வாலி-சுக்ரீவன் சண்டை ஆகிய புடைப்புச் சிற்பங்கள் கருவறை புறச் சுவரிலும், அர்த்த மண்டப புறச் சுவரிலும் அமைந்துள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 500 ஆண்டுகள் பழமையானது. பிற்காலப் பாண்டியர், நாயக்கர் கலைப்பாணியைப் பெற்றுள்ளது. |
தொட்டப்ப நாயக்கனூர் சிவன் கோயில்
| கோயிலின் அமைப்பு | சிவன் கோயில் முழுவதும் தாங்குதளத்திலிருந்து கற்றளியாக அமைந்துள்ளது. துணைத் தாங்குதளத்துடன் (உபபீடம்) தாங்குதளம் உள்ளது. உபானம், ஜகதி, சிலம்புக் குமுதம், கண்டம், பட்டிகை என்ற தாங்குதள உறுப்புகளைக் கொண்டுள்ளது. துணைத் தாங்குதளத்தில் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறையும் அர்த்தமண்டபமும் கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது. கருவறை புறச் சுவரிலும், அர்த்தமண்டப புறச்சுவரிலும் வெற்றுக் கோட்டங்கள் அமைந்துள்ளன. கோட்டங்களை இருபுறமும் சிம்ம அரைத்தூண்கள் அழகு செய்கின்றன. இக்கோட்டங்களின் புறத்தே இருபுறமும் புடைப்புச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையைத் தொடர்ந்து இடைநாழிகை எனப்படும் அந்தராளம் உள்ளது. அந்தராளப் பகுதியில் தெற்கிலும், வடக்கிலும் சாளரம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உட்புறம் முழுவதும் சிதிலமடைந்துள்ளது. தளங்கள் ஏதும் காணப்படவில்லை. அம்மன் கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையும் அர்த்தமண்டபமும் கொண்டதாக இக்கோயில் அமைந்துள்ளது. துணைத் தாங்கு தளத்தின் கண்டப்பகுதியில் புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. சிவன் கோயில் போன்றே அம்மன் கோயில் கட்டட அமைப்பும் காணப்படுகின்றது. பத்ம ஜகதியும், முப்பட்டை குமுதத்தில் பூ வேலைப்பாடுகளும் காட்டப்பட்டுள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | வழிபாட்டில் இல்லை. சிதிலமடைந்துள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | ஆனையூர், ஏழுமலை, தேனி-அல்லி நகரம் |
| செல்லும் வழி | உசிலம்பட்டியிலிருந்து தேனி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள தொட்டப்ப நாயக்கனூில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | வழிபாடு இல்லை. |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 41 |
| பிடித்தவை | 0 |