வழிபாட்டுத் தலம்
இடையார்பாக்கம் மகாதேவர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | இடையார்பாக்கம் மகாதேவர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | மகாதேவர் கோயில் |
| ஊர் | இடையார்பாக்கம் |
| வட்டம் | திருப்பெரும்புதூர் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | மகாதேவர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / முதலாம் குலோத்துங்க சோழன் |
| கல்வெட்டு / செப்பேடு | கல்வெட்டுகள் உள்ளன. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, வடக்கில் பிரம்மன் அமைக்கப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். சோழர்கால உருளைத் தூண்கள் முகமண்டபத்தில் இடம் பெற்றுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 800ஆண்டுகள் பழமையானது. பிற்கால சோழர் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. |
|
சுருக்கம்
இடையார்பாக்கம் கோயில் தொண்டை மண்டலத்திற்கே சிறப்பானதொரு கட்டட அமைப்பான தூங்கானை மாட வடிவத்துடன் அமைந்துள்ளது. இக்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் கூடிய இக்கோயில் விமானம் இருதள அமைப்புடையது. கருவறையின் தேவகோட்ட மாடங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய இறை உருவங்கள் சோழர் கால கலைப்பாணியில் காட்சி தருகின்றன.
|
|
இடையார்பாக்கம் மகாதேவர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இருதளங்களைக் கொண்டுள்ளது. கற்றளியாக விளங்குகின்றது. தூங்கானை மாடக்கோயில் வகையைச் சார்ந்தது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சிவன்கூடல் சிவன் கோயில், திருப்பெரும்புதூர் கோயில் |
| செல்லும் வழி | சென்னை-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் சுங்குவார் சத்திரத்திலிருந்து திருவள்ளுர் சாலையில் 28 கி.மீ தொலைவில் திருப்பெரும்புதூர் வட்டத்தில் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 முதல் மாலை 5.00 வரை |
இடையார்பாக்கம் மகாதேவர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | திருப்பெரும்புதூர் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | திருவள்ளுர், செங்கல்பட்டு |
| அருகிலுள்ள விமான நிலையம் | சென்னை - மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | திருப்பெரும்புதூர் விடுதிகள், திருவள்ளுர் விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 45 |
| பிடித்தவை | 0 |