Back
வழிபாட்டுத் தலம்

அருள்மிகு தொறையாத்தம்மன் கோயில்

அருள்மிகு தொறையாத்தம்மன் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் அருள்மிகு தொறையாத்தம்மன் கோயில்
வேறு பெயர்கள் தொறையாத்தம்மன் ஆலயம்
ஊர் உட்கோட்டை
வட்டம் பூவிருந்தவல்லி
மாவட்டம் திருவள்ளூர்
உட்பிரிவு 3
தாயார் / அம்மன் பெயர் தொறையாத்தம்மன்
தலமரம் வேப்பமரம்
திருக்குளம் / ஆறு இரு குளங்கள்
வழிபாடு இருகால பூசை
திருவிழாக்கள் ஆடித் திருவிழா, தை வெள்ளி, பங்குனித் திருவிழா
காலம் / ஆட்சியாளர் கி.பி.16-17-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு கருவறை விமானத்தின் தாங்குதளத்தின் உறுப்புகளான ஜகதியிலும், குமுதத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் உண்ணாழிகையினுள் கிழக்கு பார்த்தவாறு தொறையாத்தம்மன் காட்சியளிக்கிறார். உடன் அன்னையர் எழுவர் உள்ளனர். வடக்கு பார்த்தவாறு விநாயகரும், தென்முகக் கடவுளும் பழங்காலப் பெருவுரு சிலைகளாக அமைந்துள்ளன. கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. தெற்கில் காலபைரவருக்கு தனியே சிறுகோயில் உள்ளது. பலிபீடத்தின் எதிரேயுள்ள கல்மேடையில் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றாக உடைந்த அம்மன் சிலையின் தலை மட்டும் உள்ளது.
தலத்தின் சிறப்பு 400 ஆண்டுகள் பழமையானது. நாட்டுப்புற பெண் தெய்வத்திற்கு எடுப்பிக்கப்பட்ட கற்றளி
சுருக்கம்

சென்னை-திருவள்ளூர் சாலையில் திருமழிசை அடுத்து வெள்ளவேடு. இடதுபுறம் திரும்ப, குத்தப்பாக்கம் தாண்டினால் உட்கோட்டை கிராமம் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உட்கோட்டை கிராமத்தின் மையப்பகுதியில் தொறையாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அடர்ந்த வீடுகளடங்கிய குறுகிய தெரு வழியே பயணித்தால், புதிதாய் கட்டப்பட்ட அம்மன் கோவிலருகே பாதை முடிந்து விடுகிறது. பின் வேலியிட்ட தோட்டத்தினூடே ஒற்றையடிப் பாதையில் சென்றால், உட்கோட்டை கிராம தொறையாத்தம்மன் கோயில் கற்றளியாய் காட்சியளிக்கிறது. இக்கோயிலில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சப்தமாதர், கருவறையில் தொறையாத்தம்மன் ஆகிய திருவுருவங்கள் காணப்படுகின்றன.

அருள்மிகு தொறையாத்தம்மன் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் கற்றளியாக விளங்குகின்றது. உபபீடம் மற்றும் தாங்குதளம் முதல் கூரைப்பகுதி வரையே தற்போது காட்சியளிக்கிறது. விமானத்தின் அமைப்பு அறியக்கூடவில்லை. விமானத்தின் தளப்பகுதி சுதையால் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். எனவே சிதைவுற்றிருக்கலாம். விமானமற்ற திருவுண்ணாழிகை சதுர வடிவில் அமைந்துள்ளது. உண்ணாழிகையினுள் கிழக்கு பார்த்தவாறு தொறையாத்தம்மன் காட்சியளிக்கிறார். உடன் அன்னையர் எழுவர் உள்ளனர். அர்த்த மண்டபத்தினைத் தொடர்ந்து தூண்களுடன் கூடிய சிறு முக மண்டபம் உள்ளது. எதிரே பெரிய பலி பீடம். வடக்கு பார்த்தவாறு விநாயகரும், தென்முகக் கடவுளும் பழங்காலப் பெருவுரு சிலைகளாக அமைந்துள்ளன.கருவறை விமானத்தின் தேவகோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. தெற்கில் காலபைரவருக்கு தனியே சிறுகோயில் உள்ளது. எதிரில் ஒரு கல் மேடை. மேடையில் பல சிற்பங்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்றாக உடைந்த அம்மன் சிலையின் தலை மட்டும் உள்ளது. கோயிலின் வடமேற்கிலும் , வடகிழக்கிலும் அழகிய குளங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்நீர்த்துறைகளின் கரைகளில் அமைந்ததாலோ இப்பெண் தெய்வத்திற்கு துறையாற்று அம்மன் எனப்பெயர் வழங்கியிருக்க வேண்டும். பின்பு தொறையாத்தம்மன் என மருவியிருக்க வேண்டும் என ஊகிக்கலாம்.
பாதுகாக்கும் நிறுவனம் உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருமழிசை பெருமாள் கோயில், குத்தப்பாக்கம் கோயில், நேமம் கோயில்
செல்லும் வழி சென்னை-திருவள்ளூர் சாலையில் திருமழிசை அடுத்து வெள்ளவேடு. இடதுபுறம் திரும்ப, குத்தப்பாக்கம் தாண்டினால் உட்கோட்டை கிராமம் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உட்கோட்டை கிராமத்தின் மையப்பகுதியில் தொறையாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 10.00 மாலை 4.00 மணி முதல் இரவு 6.00 வரை
அருள்மிகு தொறையாத்தம்மன் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் உட்கோட்டை, வெள்ளவேடு
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருவள்ளுர்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி திருவள்ளுர் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் சென்னை சேவாஸ் பாண்டியன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் சென்னை சேவாஸ் பாண்டியன்
வழிபாட்டுத் தலம்

அருள்மிகு தொறையாத்தம்மன் கோயில்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 15 Jun 2017
பார்வைகள் 435
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்