வழிபாட்டுத் தலம்
கொற்கை வெற்றிவேல் அம்மன்-கண்ணகி கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கொற்கை வெற்றிவேல் அம்மன்-கண்ணகி கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கண்ணகி கோயில் |
| ஊர் | கொற்கை |
| வட்டம் | ஸ்ரீவைகுண்டம் |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| உட்பிரிவு | 3 |
| தாயார் / அம்மன் பெயர் | கண்ணகி |
| தலமரம் | வேப்பமரம் |
| திருக்குளம் / ஆறு | தாமிரபரணி |
| வழிபாடு | ஒருகால பூசை |
| திருவிழாக்கள் | சித்ரா பௌர்ணமி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பாண்டியர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் கண்ணகி அம்மன் சிற்பம் அமைந்துள்ளது. கருவறையின் முன்னுள்ள மண்பத்தில் மகிஷாசுரமர்த்தினி, பைரவர், பேய்ச்சியம்மன் ஆகிய சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. பரந்த வெளிப்புறத்தில் விநாயகருக்கு தனியே சிறு கோயில் அமைந்துள்ளது. அக்கோயில் கருவறையில் விநாயகர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கண்ணகி கோயிலின் முன்னே அனுமன், பெண் தெய்வம் ஆகிய உதிரிச் சிற்பங்கள் காணப்படுகின்றன. |
| தலத்தின் சிறப்பு | 1000 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
பண்டையத் தமிழகத்தில் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய கொற்கையில் ‘வெற்றிவேல் அம்மன்’ என்ற பெயரில் கண்ணகிக்கு கோயில் எடுப்பிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது. வெற்றிவேல் அம்மன் தற்போது நாட்டுப்புற தெய்வமாக விளங்குகிறது. வெற்றிவேற்செழியன் என்னும் பாண்டிய மன்னன் பத்தினி வழிபாட்டை முன்னிறுத்தி கண்ணகிக்கு கொற்கையில் கோயில் எடுப்பித்தான். இக்கோயில் புனரமைப்பு நிலையில் இக்கால கட்டிடப்பாணியில் திகழ்கிறது.
|
|
கொற்கை வெற்றிவேல் அம்மன்-கண்ணகி கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் சிறிய நவீன பாணி கட்டிடக்கலையைப் பெற்று விளங்குகிறது. கருவறையும், மகாமண்டபமும் பெற்றுள்ளது. கருவறை கருங்கல்லினால் ஆனது. மண்டபம் தற்கால அமைப்பாகும். கருவறை விமானத்தில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வில் வண்டி வடிவ விமான வடிவமைப்பை பெற்று விளங்குகிறது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | கொற்கை சிவன் கோயில் |
| செல்லும் வழி | தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் கொற்கை அமைந்துள்ளது. ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் நெடுஞ்சாலையில் வாழவல்லான் என்ற கிராமத்திற்கு 3 கிலோமீட்டர் கிழக்கிலும் உமரிக்காடு கிராமத்திற்கு நான்கு கிலோமீட்டர் வடக்கிலும் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 100 |
| பிடித்தவை | 0 |