வழிபாட்டுத் தலம்
துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கடம்பவனேஸ்வரர் கோயில் |
| ஊர் | துடையூர் |
| வட்டம் | மணச்சநல்லூர் |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | விஷமங்களேஸ்வரர், கடம்பவனேஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | மங்களநாயகி, வீரமங்களேஸ்வரி |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி ஆரூத்ரா தரிசனம், பங்குனி பிரம்மோத்சவம், மாசி தெப்போத்சவம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறை வாயிலின் இருபுறத்திலும் சுமார் எட்டு அடி உயரத்தில் துவாரபாலகர் சிற்பங்கள் அமைந்துள்ளன. கிழக்கு நோக்கிய கருவறையில் விஷமங்களேஸ்வரர் லிங்க உருவில் காட்சியளிக்கிறார். மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி மங்களநாயகியின் திருமுன் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவில் இடதுபுறம் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன், பின் வலதுகரத்தில் பிரயோகச் சக்கரத்துடன் திருமால் காட்சி தருகிறார். கருவறையின் தென்புற தேவகோட்டத்தில் வீணையை ஏந்தி, நின்ற கோலத்தில் வீணாதரர் காட்சியளிக்கிறார். இவர் "திகசண்டளா வீணா தட்சிணாமூர்த்தி" ஆவார். கருவறையின் மேற்குப்புற தேவகோட்டத்தில் உமா ஆலிங்கன மூர்த்தி, தொடர்ந்து மேற்கே, தனித் திருமுன்னில் லட்சுமி நாராயணர், கருவறை விமானத்தின் வடபுற தேவகோட்டத்தில் நான்முகன், கலைமகள், அர்த்தமண்டப வடக்கு வெளிப்புற கோட்டத்தில் துர்க்கை, தென்புற கோட்டத்தில் கணபதி ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் தாங்குதளத்தின் கண்டபாதத்தில் புடைப்புச் சிற்பங்கள் குறுஞ்சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் யானையின் மகப்பேறுக் காட்சி, ஆனையுரித்த தேவர், நரசிம்மர், ஆடல்வல்லான், ஆடல் மகளிர், திருமால் போன்ற சிற்பக் காட்சிகள் புடைப்பிக்கப்பட்டுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார வைப்புத்தலம். |
|
சுருக்கம்
துடையூர் கொள்ளிடக் கரையில் அமைந்த வைப்புத் தலம். மூலவர் விஷமங்களேஸ்வரர் என்றும், கடம்பவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். ஆதித்திய சோழன் காலக் கட்டுமானப் பணியை கொண்டுள்ள இக்கோயில், மிகச் சிறந்த கலைக் கருவூலமாக விளங்குகிறது. காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றான திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) அருகில் அய்யனாற்றின் தென்கரையில் துடையூர் என்ற இந்த வைப்புத் தலம் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இறைவன் விஷமங்களேஸ்வரர் என்றும், கடம்பவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் வீரமங்களேஸ்வரி என்ற பெயருடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.
|
|
துடையூர் விஷமங்களேஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | ஸ்ரீரங்கம் கோயில், திருவானைக்காவல், திருமழபாடி, திருச்சென்னம்பூண்டி சிவன் கோயில் |
| செல்லும் வழி | திருச்சிராப்பள்ளியில் இருந்து முசிறி செல்லும் சாலை வழியில் திருவாசிக்கு முன்பாகவே துடையூர் உள்ளது. இவ்வூர் தொடையூர் என்றும் தற்போது அழைக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு. திருச்சியில் இருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. துடையூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வாய்க்கால் பாலத்தைத் தாண்டி இடப்புறமாகத் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8 மணி முதல் பகல் 12-30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 21 Mar 2019 |
| பார்வைகள் | 274 |
| பிடித்தவை | 0 |