Back
வழிபாட்டுத் தலம்
திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி
வேறு பெயர்கள் வாலாஜா பெரிய மசூதி
ஊர் திருவல்லிக்கேணி
வட்டம் திருவல்லிக்கேணி
மாவட்டம் சென்னை
உட்பிரிவு 8
வழிபாடு ஐந்து காலத் தொழுகை
திருவிழாக்கள் ரமலான், பக்ரீத், மிலாடி நபி
காலம் / ஆட்சியாளர் கி.பி.1795 / ஆற்காடு நவாப்புகள்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 225 ஆண்டுகள் பழமையானது. ஆற்காடு நவாப் வாலாஜா குடும்பத்தினரால் பராமரிக்கப்படுகிறது.
சுருக்கம்
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் பகுதி வாலாஜா சாலையில் வாலாஜா மசூதி அமைந்துள்ளது. இம்மசூதி 1795ஆம் ஆண்டு நவாப் அவர்களின் நினைவால் வாலாஜா குடும்பத்தினரால் கட்டப்பட்டது. ஆற்காடு ராஜகுமாரனுடன் இன்றளவிற்கும் இது சம்மந்தப்பட்டுள்ளது. இது பெரிய மசூதி என்றும் அழைக்கப்படுகிறது. இது தென்னிந்தியாவிலுள்ள முக்கியமான இஸ்லாமிய புண்ணிய ஸ்தலங்களுள் ஒன்றாகும்.
திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி
கோயிலின் அமைப்பு இம்மசூதி சாம்பல் நிற கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தை தாங்கக் கூடிய இரும்பு போன்ற உலோகங்களை இக்கட்டிடத்திற்கு பயன்படுத்தவில்லை. இருப்பினும் இவ்வரலாற்று சிறப்பு மிக்க மசூதி பல நூற்றாண்டுகளைக் கடந்தும் பொலிவுடனும், அழகுடனும் காணப்படுகிறது. இம்மசூதியின் நுழைவாயிலில் இரண்டு மெல்லிய உயரமான ஸ்தூபிகள் உள்ளன. இடைக்கால கட்டிடக்கலையின் அழகும், நுட்பமும் இதன் மூலம் நன்கு புலப்படுகிறது.
பாதுகாக்கும் நிறுவனம் ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், சாந்தோம் தேவாலயம், மகாகவி பாரதியார் நினைவு இல்லம், விவேகானந்தர் மண்டபம்
செல்லும் வழி சென்னை
கோவில் திறக்கும் நேரம் காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை
திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருவல்லிக்கேணி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருவல்லிக்கேணி
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை மீனம்பாக்கம்
தங்கும் வசதி திருவல்லிக்கேணி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 56
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்