வழிபாட்டுத் தலம்
பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கைலாசநாதர், பதரிவனேஸ்வரர், இலந்தையடிநாதர் |
| ஊர் | பிரம்மதேசம் |
| வட்டம் | அம்பாசமுத்திரம் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| தொலைபேசி | 04634-254247 |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | கைலாசநாதர் |
| தாயார் / அம்மன் பெயர் | பெரியநாயகி |
| தலமரம் | இலந்தை |
| திருக்குளம் / ஆறு | பிரம்ம தீர்த்தம் |
| ஆகமம் | காமீகம் |
| வழிபாடு | உஷைக்காலம், காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தசாமம் |
| திருவிழாக்கள் | சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு / பிற்காலப் பாண்டியர், விசயநகரர் |
| சுவரோவியங்கள் | திருச்சுற்றுமாளிகையில் விஜயநகரர் காலத்து ஓவியங்கள் உள்ளன. கி.பி.14-15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. மேலும் சேர மன்னர்களின் மரவேலைப்பாடுகளில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. |
| சிற்பங்கள் | மூலவர் கருவறை தாங்குதளத்தில் யாளி வரி செல்கிறது. யானை உருவங்களும், சிம்ம உருவங்களும் அமைந்துள்ளன. கருவறையில் இலிங்க வடிவில் கைலாச நாதர் உள்ளார். இலந்தையடி நாதருக்கு தனிக்கருவறை அமைந்துள்ளது. கருவறையின் முன்னால் இரண்டு வாயிற்காவலர்கள் உள்ளனர். கங்காளர் சிற்பம் காணப்படுகின்றது. அதன் அருகே இசைக்கும் கணங்களும், மற்ற கணங்களும் உள்ளன. கங்காளர் சிற்பத்திற்கு பின்னே அமைந்த புடைப்புச் சிற்பங்களில் தேவர்களும், நான்முகன், திருமாலும் தத்தம் வாகனங்களில் காட்டப்பட்டுள்ளனர். மேலும் பெரியநாயகிக்கு தனிக்கருவறை அமைந்துள்ளது. திருவாதிரை மண்டபத்திலும், சோமவார மண்டபத்திலும் யாளித்தூண்கள் அமைந்துள்ளன. பிற தூண்களில் ஆண், பெண் உருவங்கள் அமைந்துள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 800 ஆண்டுகள் பழமையானது. பாண்டியர், விசயநகரர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
|
சுருக்கம்
கோயிலில் இராஜகோபுரம் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் முழுநிழலும் தெப்பக்குளத்தில் விழுமாறு அமைத்திருத்தல் சிறப்பு. சூரியனின் ஒளி தட்சிணாயன புண்ணிய காலத்திலும், உத்தராயணப் புண்ணிய காலத்திலும் கருவறையிலுள்ள இலிங்கத்தின் மீது படுமாறு கட்டடக் கலையை அமைத்திருத்தல் தனிச் சிறப்பாகும். இக்கோயிலில் ராஜகோபுரம், மத்திய கோபுரம், மேலக்கோபுரம் என மூன்று கோபுரங்களும், ஆறு விமானங்களும் அமைந்துள்ளன. கோயில் திருச்சுற்றில் வட்டவடிவிலான தாமரைப்பீடத்தின் மீது நின்று பார்க்கும் போது இவையனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைக்கப்பட்டிருப்பது நன்கு தெரியும். முன்மண்டபத்தின் வடக்கே திருவாதிரை மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களுடன் அமைந்தது. அம்மன் திருமுன் செல்லும் வழியிலுள்ள சோமவார மண்டபம் மற்றும் பிட்சாடனர் சபை ஆகியவை கலைப்பெட்டகங்களாகும். கருவறை விமானத்தின் தாங்குதளம் பிரதிபந்த அதிட்டானமாக விளங்குகிறது. அதாவது தாங்குதளத்தில் யாளி வரி செல்கிறது. அதனால் இப்பெயர் பெறுகிறது. விமானத்தின் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களுடன் அமைந்த கோட்டங்கள் காணப்படுகின்றன. இக்கோட்டங்கள் வெற்றிடமாகவே உள்ளன. இது பாண்டியர் கட்டடக் கலை முறைமையாகும். அரைத்தூண்களில் மாலைத்தொங்கல் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றுமாளிகையில் சுவரில் விசயநகர கால ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன. திருமதிலை ஒட்டி சிறு கோயில் ஒன்று அமைந்துள்ளது. மூலவர் கருவறை தாங்குதளத்தில் யாளி வரி செல்கிறது. யானை உருவங்களும், சிம்ம உருவங்களும் அமைந்துள்ளன. கருவறையில் இலிங்க வடிவில் கைலாச நாதர் உள்ளார். இலந்தையடி நாதருக்கு தனிக்கருவறை அமைந்துள்ளது. கருவறையின் முன்னால் இரண்டு வாயிற்காவலர்கள் உள்ளனர். கங்காளர் சிற்பம் காணப்படுகின்றது. அதன் அருகே இசைக்கும் கணங்களும், மற்ற கணங்களும் உள்ளன. கங்காளர் சிற்பத்திற்கு பின்னே அமைந்த புடைப்புச் சிற்பங்களில் தேவர்களும், நான்முகன், திருமாலும் தத்தம் வாகனங்களில் காட்டப்பட்டுள்ளனர். மேலும் பெரியநாயகிக்கு தனிக்கருவறை அமைந்துள்ளது. திருவாதிரை மண்டபத்திலும், சோமவார மண்டபத்திலும் யாளித்தூண்கள் அமைந்துள்ளன. பிற தூண்களில் ஆண், பெண் உருவங்கள் அமைந்துள்ளன. இக்கோயில் மிகப்பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. தலம், தீர்த்தம், மூர்த்தி மூன்றிலும் சிறப்புடையது. சோழர் காலத்திலிருந்து தொடர்ச்சியாக பாண்டியர், விசயநகரர் ஆகியோர் கட்டடக்கலையைப் பெற்று விளங்குகிறது.
|
|
பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில்
| கோயிலின் அமைப்பு | கோயிலில் இராஜகோபுரம் அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் முழுநிழலும் தெப்பக்குளத்தில் விழுமாறு அமைத்திருத்தல் சிறப்பு. சூரியனின் ஒளி தட்சிணாயன புண்ணிய காலத்திலும், உத்தராயணப் புண்ணிய காலத்திலும் கருவறையிலுள்ள இலிங்கத்தின் மீது படுமாறு கட்டடக் கலையை அமைத்திருத்தல் தனிச் சிறப்பாகும். இக்கோயிலில் ராஜகோபுரம், மத்திய கோபுரம், மேலக்கோபுரம் என மூன்று கோபுரங்களும், ஆறு விமானங்களும் அமைந்துள்ளன. கோயில் திருச்சுற்றில் வட்டவடிவிலான தாமரைப்பீடத்தின் மீது நின்று பார்க்கும் போது இவையனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைக்கப்பட்டிருப்பது நன்கு தெரியும். முன்மண்டபத்தின் வடக்கே திருவாதிரை மண்டபம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களுடன் அமைந்தது. அம்மன் திருமுன் செல்லும் வழியிலுள்ள சோமவார மண்டபம் மற்றும் பிட்சாடனர் சபை ஆகியவை கலைப்பெட்டகங்களாகும். கருவறை விமானத்தின் தாங்குதளம் பிரதிபந்த அதிட்டானமாக விளங்குகிறது. அதாவது தாங்குதளத்தில் யாளி வரி செல்கிறது. அதனால் இப்பெயர் பெறுகிறது. விமானத்தின் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களுடன் அமைந்த கோட்டங்கள் காணப்படுகின்றன. இக்கோட்டங்கள் வெற்றிடமாகவே உள்ளன. இது பாண்டியர் கட்டடக் கலை முறைமையாகும். அரைத்தூண்களில் மாலைத்தொங்கல் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சுற்றுமாளிகையில் சுவரில் விசயநகர கால ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன. திருமதிலை ஒட்டி சிறு கோயில் ஒன்று அமைந்துள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | அகத்தீஸ்வரர் கோயில், காசிபநாதர் கோயில், கிருஷ்ணசுவாமி கோயில், தென்னழகர் கோயில், நீலமணிநாதசுவாமி கோயில் |
| செல்லும் வழி | திருநெல்வேலியிலிருந்து 33 கி.மீ. தொலைவில் பிரம்மதேசம் அமைந்துள்ளது. திருநெல்வேலி அல்லது தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரம் சென்று அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள பிரம்மதேசத்திற்கு சிற்றுந்துகள் மூலம் செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00-09.30முதல் மாலை 5.30-7.30 வரை |
பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | தென்காசி, அம்பாசமுத்திரம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | அம்பாசமுத்திரம், தென்காசி, திருநெல்வேலி |
| அருகிலுள்ள விமான நிலையம் | மதுரை |
| தங்கும் வசதி | அம்பாசமுத்திரம், தென்காசி, திருநெல்வேலி விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 69 |
| பிடித்தவை | 0 |