Back
வழிபாட்டுத் தலம்
கோவில்தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் கோவில்தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் திருச்சேலூர்
ஊர் கோவில்தேவராயன்பேட்டை
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் சுகந்தகுசலாம்பிகை
திருக்குளம் / ஆறு மச்ச தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகைத் திருநாள், மார்கழி திருவாதிரை
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் ஆதித்த சோழன்
கல்வெட்டு / செப்பேடு இக்கோயிலில் 55 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு இக்கோயிலைச் சார்ந்து ஒரு ஆதுலர் சாலை (மருத்துவமனை) இயங்கியதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் மச்சபுரீஸ்வரர் கோவிலில் முருகனுக்கு தனி சன்னிதி உள்ளது. முருகன் ஆறுமுகத்தினராய், 12 கரங்களுடன் விளங்குகிறார். வலது கையில் சங்கும், இடது கையில் சக்கரமும் ஏந்தியுள்ளார். திருமாலுக்கு உள்ளதைப்போல இங்கு முருகனுக்கும் சங்கு, சக்கரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகனுடன், வள்ளி தெய்வானையும் உடன் உள்ளனர். கருவறை விமானத்தின் தென்புறக் கோட்டத்தில் தென்முகக் கடவுள், மேற்கில் விஷ்ணு, வடக்கில் நான்முகன் காட்டப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் துர்க்கை, தெற்கில் கணபதி உள்ளனர்.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. சோழர் காலக் கற்றளி.
சுருக்கம்
கும்பகோணம் அருகேயுள்ள கோயில் தேவராயன்பேட்டையில் உள்ள திருக்கோயில் மச்சபுரீசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. பெரிய புராணத்தில் இத்தலம் திருச்சேலூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை மீன் ஒன்று வழிபட்டதால் இறைவனுக்கு மச்சபுரீசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இப்புராண நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில் கோயிலின் முன்மண்டபத்தில் சிவலிங்க வடிவிலான இறைவனை மீன் வழிபடுவது போன்ற சிற்பம் காணப்படுகிறது. இத்திருத்தலம் தேவார வைப்புத்தலமாகும். இங்குள்ள இறைவன் மச்சபுரீசுவரர் ஆவார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை ஆவார்.
கோவில்தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட, முற்காலச்சோழர் கலைப்பாணியைச் சேர்ந்தது. கருவறை தொடங்கி, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம், எனவும், நந்தி, பலிபீடம், கொடி மரம் என ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இரு நுழைவாயிலைக் கொண்ட இக்கோயிலின் உள், வெளித் திருச்சுற்றுகள் உயர்ந்த செங்கற்சுவற்றினால் அமைக்கப்பட்டுள்ளது. வெளித்திருச்சுற்றில் இறைவி சன்னதியான திருகாமக்கோட்டம் அமைந்துள்ளது. மேலும் நிலைவாயிலுக்கு எதிரில் நந்தியுடன் சிறு மண்டபம் உள்ளது. முன் மண்டபத்தில் இடது புறத்தில் தர்ம விநாயகர், நவக்கிரகம், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன.
பாதுகாக்கும் நிறுவனம் இந்து சமய அறநிலையத்துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருப்பாலைவனம்
செல்லும் வழி பாபநாசம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திலிருந்து 3 கிமீ தொலைவில் பண்டாரவாடையை அடுத்து கோயில் தேவராயன்பேட்டை உள்ளது. இவ்வூர் திருச்சேலூர் என்றழைக்கப்பட்டது. இவ்வூருக்குத் தெற்கே தேவராயன்பேட்டை என்ற ஒரு சிறிய ஊர் உள்ளதால் சேலூருக்கு கோயில் என்ற அடைமொழியுடன் கோயில் தேவராயன்பேட்டை என வழங்கப்படுகிறது. இவ்வூர் தற்போது பண்டாரவாடை என்ற ஊரின் உட்கிராமமாக உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
கோவில்தேவராயன்பேட்டை மச்சபுரீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் சேலூர்,கோவில்தேவராயன்பேட்டை, பண்டாரவாடை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி தஞ்சாவூர் வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் க.த.காந்திராஜன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 176
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்