Back
வழிபாட்டுத் தலம்
புத்தூர் மலை சமணக் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் புத்தூர் மலை சமணக் கோயில்
வேறு பெயர்கள் சமணக்குகை கோயில்
ஊர் மலைப்பட்டி
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
உட்பிரிவு 6
மூலவர் பெயர் சமணத் தீர்த்தங்கரர்கள்
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / அச்சணந்தி முனிவர்
கல்வெட்டு / செப்பேடு தீர்த்தங்கரர் உருவங்களின் நடுவே வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகின்றது. இங்குள்ள தீர்த்தங்கரர்களின் திருமேனிகளை செய்தளித்தவர்களைப் பற்றிய இக்கல்வெட்டு கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இக்குடைவரைக் கோயிலில் சமணத்தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன. இக்குடைவரையில் நான்கு தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர்களின் மூன்று உருவங்கள் முக்குடையுடன் காட்டப்பட்டுள்ளன. நின்ற நிலையில் ஒரு தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்களின் உருவங்கள் காலத்தால் முந்திய சிற்பக் கலைப்பாணியில் அமைந்துள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தலத்தின் சிறப்பு 1100 ஆண்டுகள் பழமையானது. சமணக் குடைவரைக் கோயில்.
சுருக்கம்
புத்தூர் மலையில் அடிவாரத்தில் அமைந்துள்ள சமணக் குடைவரைக் கோயில் அச்சணந்தியால் கி.பி.9-10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. தற்போது உள்ளுர் மக்களால் வைதீகக் கோயிலாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றது. இங்குள்ள சமணத் தீர்த்தங்கரர் உருவங்கள் வைதீகக் கடவுளராக உள்ளுர் மக்களால் தற்போது வழிபடப்படுகிறது. தீர்த்தங்கரர் சிற்பங்களின் முகத்தில் மீசை செதுக்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர் கண் மூடி அமர்ந்துள்ள தியான நிலைக் கண்களை திறந்த நிலையில் காட்ட முற்பட்டுள்ளனர். இக்கலைப்பணிகள் மக்களின் தற்காலக் கைவண்ணமாக திகழ்கின்றது.
புத்தூர் மலை சமணக் கோயில்
கோயிலின் அமைப்பு குடைவரை போன்ற அமைப்பில் பெரும் பாறையின் கீழே கோயில் போன்று மலைப்பாறையில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்குடைவரையில் நான்கு தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர்களின் மூன்று உருவங்கள் முக்குடையுடன் காட்டப்பட்டுள்ளன. நின்ற நிலையில் ஒரு தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர் உருவங்களுக்கு நடுவே கல்வெட்டு காணப்படுகின்றது.
பாதுகாக்கும் நிறுவனம் உள்ளூர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ஆனையூர் ஐராவதேஸ்வரர் கோயில், சிந்துபட்டி பெருமாள் கோயில், எழுமலை, புத்தாம்பட்டி ஜைனக்கோயில்
செல்லும் வழி உசிலம்பட்டி நகருக்கு தென்கிழக்காக 4 கி.மீ. தொலைவில் மலைப்பட்டி என்னும் சிற்றூரிலிருந்து அரை கிலோ மீட்டர் தெற்கில் உள்ள புத்தூர் மலையின் அடிவாரத்தில் இக்குடைவரைக் கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம்
புத்தூர் மலை சமணக் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் உசிலம்பட்டி, மலைப்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மதுரை
அருகிலுள்ள விமான நிலையம் மதுரை
தங்கும் வசதி மதுரை நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Jun 2017
பார்வைகள் 656
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்