வழிபாட்டுத் தலம்
திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருவலிதாயம் |
| ஊர் | பாடி |
| வட்டம் | அம்பத்தூர் |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| உட்பிரிவு | 1 |
| தாயார் / அம்மன் பெயர் | ஜெகதாம்பிகை, தாயம்மை |
| தலமரம் | கொன்றை, பாதிரி |
| திருக்குளம் / ஆறு | பரத்வாஜ் தீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | சித்திரையில் பிரம்மோற்சவம், தை கார்த்திகை, ஆண்டு தோறும் குருப் பெயர்ச்சி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள் |
| கல்வெட்டு / செப்பேடு | ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழல் கோட்டத்து அம்பத்தூர் நாட்டுத் திருவல்லிதாயம் என்று இத்தலத்தை இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முந்தியது மூன்றாம் இராஜராஜனின் கல்வெட்டுகளாகும். இக்கோயிலில் சுமார் 15 கல்வெட்டுகள் உள்ளன. அர்த்த மண்டப தெற்குப்புறமுகத்தில் உள்ள மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டு சேட்திர அருளிவித்ததைத் தெரிவிக்கிறது. மற்றொரு கல்வெட்டு பரத்வாஜி திருவிடையான் திரு ராபீசுரமுடையர்களான திருப்பதியில் விண்ணப்பம் செய்யும் திருச்சிற்றம்பலமுடையான் ஆல்ரயலிங்கமாக எழுந்தருளிவித்த நாயனார் அழகிய திருச்சிற்றம்பலமுடைய நாயனார்க்குப் பூசை அமுது படிக்கு நற்காசு பத்து அளித்துள்ளதைக் கூறுகிறது. மதுராந்தக பொத்தப்பி சோழனுடைய கல்வெட்டில் திருவலிதாயத்து ஊரவர் தங்களூரில் உள்ள இறையிலி தேவதானங்கள் நீக்கி ஊர் முழுவதையும் ஸர்வமான்யமாகக் கொடுத்ததைக் காணமுடிகிறது. |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | சதுரவடிவக் கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் உள்ளார். இறைவி நின்ற நிலையில் காட்சியளிக்கிறாள். இறைவன் கருவறை விமானத்தின் தேவக்கோட்டச் சிற்பங்களாக தென்முகக்கடவுள், கணபதி, துர்க்கை ஆகிய திருவுருவங்கள் சிற்பங்களாக உள்ளன. கருவறைத்திருச்சுற்றில் கணபதி, முருகன் ஆகிய சிற்பங்களும் காணப்படுகின்றன. |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். |
|
சுருக்கம்
இக்கோயில் தூங்கானை மாடக் கோயிலாகும். அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர், பாம்பன் சுவாமிகள், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். பாடிக்கு திருவலிதாயம், திருவல்லீஸ்வரம் என்ற மற்ற பெயர்களும் உண்டு. வலியன் என்ற கருங்குருவி சிவனை வணங்கி வழிபட்டதால் இந்த இடம் வலிதாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தலத்தில் தான் பிள்ளையாருக்கு திருமணம் நடந்தது. வியாழ பகவானாகிய குரு தன் பாவம் தீர இந்த தலத்திற்கு வந்து சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றார். கோயில் பிற்காலச் சோழ மன்னர்களால் கட்டப்பெற்றதாகும்.
|
|
திருவலிதாயம் திருவல்லீசுவரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் கோபுரத்தின் காலம் 16-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாய் உள்ளது. எண்ணற்ற கதை உருவங்கள் கோபுரத்தை அணி செய்கின்றன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபம் தூண்களுடன் காட்சியளிக்கிறது. இரு திருச்சுற்றுகளை உடையதாய் அமைக்கப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருமுல்லைவாயில் |
| செல்லும் வழி | திருவலிதாயம் என்னும் பெயர் கொண்ட இத்தலம் தற்போது பாடி என வழங்கப்படுகிறது. சென்னை – ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோயிலை அடையலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 8.30 இரவு மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 34 |
| பிடித்தவை | 0 |