வழிபாட்டுத் தலம்
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருத்தவத்துறை, லால்குடி |
| ஊர் | லால்குடி |
| வட்டம் | லால்குடி |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| தொலைபேசி | 0431-2541329 |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | சப்தபுரிஷீஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | மகாசம்பத் கௌரி, பெரிய நாயகி, மகாலட்சுமி, பைரவி (காளி). |
| ஆகமம் | சிவாகமம் |
| வழிபாடு | ஆறு கால பூசை |
| திருவிழாக்கள் | சித்ராபவுர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தசஷ்டி, சோமவாரம், திருவாதிரை, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.7-ஆம் நூற்றாண்டு / பல்லவர், முற்காலச் சோழர், விசயநகரர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் சிவலிங்க வடிவாக எழுந்தருளியுள்ளார் சப்தரிஷீஸ்வரர். தமிழகத்தில் இக்கோயிலிலும், காஞ்சி ஏகாம்பர நாதர் கோயிலிலும், வாலீஸ்வரர் கோயிலிலும் கட்வங்கம் ஆயுதத்துடன் சிவ வடிவங்கள் காணப்படுகின்றன. இக்கோயிலில் விநாயகர், முருகன் உடன் வள்ளி தெய்வானை, ஐயப்பன், தட்சணாமூர்த்தி, கால பைரவர், விஷ்ணு துர்க்கை, சரஸ்வதி, பிரம்மன், 63 நாயன்மார்கள், ஆஞ்சநேயர் , நவகிரகங்கள் ஆகியோர் உள்ளனர். |
| தலத்தின் சிறப்பு | 1300 ஆண்டுகள் பழமையானது. தேவார வைப்புத்தலம். |
|
சுருக்கம்
திருச்சி, லால்குடியில் அமைந்துள்ள இத்தலம் தேவார வைப்புத்தலமாகும். இக்கோயில் சப்தரிஷிகளோடு தொடர்புடையதாக தலபுராணம் கூறுகிறது. சோழர்காலத்தின் கலைப்பாணியைக் கொண்டு கற்றளியாக விளங்கும் இக்கோயில் ஹொய்சாள மன்னர்களின் கலைப்பாணியையும் மண்டபம் மற்றும் தூண் வேலைப்பாடுகளில் கொண்டுள்ளது.
|
|
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மலைக்கோட்டை குடைவரைக் கோயில்கள், மாற்றுரைவரதீஸ்வரர் கோயில், ஆதிமூலேசுவரர் கோயில் |
| செல்லும் வழி | திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 18கிமீ தொலைவில் கோவில் (லால்குடி) உள்ளது.பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ளது.திருச்சி -நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் இந்த ஊர் உள்ளது . |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 5.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 Mar 2019 |
| பார்வைகள் | 46 |
| பிடித்தவை | 0 |