Back
வழிபாட்டுத் தலம்
திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் கண்டன ஷேத்ரம், பஞ்சகமல ஷேத்ரம்
ஊர் திருக்கண்டியூர்
வட்டம் திருவையாறு
மாவட்டம் தஞ்சாவூர்
தொலைபேசி 9344608150
உட்பிரிவு 2
மூலவர் பெயர் ஹரசாப விமோசனப் பெருமாள், கமலநாதன்
தாயார் / அம்மன் பெயர் கமலவல்லி நாச்சியார்
திருக்குளம் / ஆறு கபால மோட்ச புஷ்கரிணி, ஹத்யா விமோசன தீர்த்தம், பத்ம தீர்த்தம் (பலி தீர்த்தம்)
ஆகமம் வைகானச ஆகமம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் பங்குனியில் பிரம்மோற்சவம், ஐப்பசியில் பவித்ர உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை தீபம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றச் செய்யும் வரப்பிரசாத வடிவமான, ஸ்ரீ லட்சுமி நரசிம்மன், ஸ்ரீ மகா சுதர்சனன், சிலைகள் அழகிலும், அருளிலும் பொலிவுற்று திகழ்பவை.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
சுருக்கம்
சிவன் தனது கையில் ஒட்டிக்கொண்ட பிரம்ம கபாலம் நீங்கியதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும்முகமாக தானும் இவ்விடத்தே கோவில் கொண்டார். எனவே இது ஒரு மும்மூர்த்திதலம். தற்போது இங்குள்ள பிரம்மாவின் கோவில் மூடப்பட்டு பிரம்மா மற்றும் ஸரஸ்வதி சிலைகள் சிவபெருமானின் தலத்தில் வைக்கப்பட்டுள்ளன. இத்தலம் ஸ்ரீரங்கத்தைவிட மிகவும் தொன்மைவாய்ந்தது. இத்தலத்தின் முதல் பெருமாள் ஸ்ரீசந்தானகோபால கிருஷ்ணனும், நவநீத கிருஷ்ணனும் ஆவார்கள். பல சதுர்யுகங்களுக்கு முன்னால் உண்டானது இந்த திவ்ய ஷேத்ரம். ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி என்ற நூலை எழுதிய ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்னும் மஹான் கண்டியூருக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சார்ந்தவர். கண்டியூர் பெருமான் மீது அளவு கடந்த பக்தி பூண்டவர். திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். ஒரே ஒரு பாடலில் இத்தலத்துப் பெருமை பற்றிக் கூறுகிறார். இத்தலத்தோடு சேர்ந்து ஸ்ரீரங்கம், கச்சி (காஞ்சி) பேர் (திருப்பேர் நகர் என்னும் கோயிலடி) மல்லை என்னும் திருக்கடன்மல்லை என்னும் நான்கு ஸ்தலங்களையுஞ் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார். சேக்கிழாரின் பெரியபுராணமும், கந்தபுராணமும் பிரம்மனின் மண்டையோடு சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டதைப் பற்றிப் பேசுகின்றன. மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஒரு சமயம் இக்கோவிலின் முகப்பில் நின்று சண்டையிட வேண்டிய சந்தர்ப்பம் உண்டாக அப்போது இப்பெருமான் திப்புசுல்தானை ஆட்கொண்டார் எனவும். இப்பெருமான் மீது பக்திகொண்ட திப்பு, கோவிலை வலம் வந்து போர் முடித்து வென்றார் என்பதும் கர்ண பரம்பரையான பழங்கால வாய்வழிக் கதையாகும்.
திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் கருவறை விமானம் கமலாக்ருதி விமானம் எனப்படுகிறது. கண்டன ஷேத்ரமென்றும், பஞ்சகமல ஷேத்ரமென்றும் அழைக்கப்படும் இங்கு ஐந்து கமலங்கள் உள்ளன. அதாவது கமலா ஷேத்ரம், கமலா புஷ்கரணி, கமல விமானம், கமலநாதன், கமலவல்லி நாச்சியார் என ஐந்து.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் திருக்கண்டியூர் பிரம்மசிரக்கண்டீசுவரர் கோயில், திருவேள்விக்குடி சிவன் கோயில், திருச்சோற்றுத்துறை நாதர் கோயில்
செல்லும் வழி இத்தலம் தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் 6 வது மைலில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.30 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருக்கண்டியூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி தஞ்சாவூர் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 05 Dec 2018
பார்வைகள் 78
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்