Back
வழிபாட்டுத் தலம்
கண்டமங்கலம் திருநாரீஸ்வரத்து மகாதேவர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் கண்டமங்கலம் திருநாரீஸ்வரத்து மகாதேவர் கோயில்
வேறு பெயர்கள் திருநாரீஸ்வரத்து மகாதேவர் கோயில்
ஊர் கண்டமங்கலம்
வட்டம் விழுப்புரம்
மாவட்டம் விழுப்புரம்
உட்பிரிவு 1
மூலவர் பெயர் திருநாரீஸ்வரத்து மகாதேவர்
காலம் / ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகச் சோழன்
கல்வெட்டு / செப்பேடு கருவறையின் தென்புற அதிட்டானத்தில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இக்கோயில் பராந்தகன் காலத்தைச் சேர்ந்தது எனக் கல்வெட்டின் மூலம் அறியலாம். இவ்வூர் சோழர்கள் காலத்தில் ஸ்ரீகண்டராதித்த மதுராந்தக மங்கலம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. செம்பியன் மாதேவியின் கணவனும், உத்தமசோழனின் தந்தையும், மேற்கெழுந்தருளிய சிவஞானியுமான கண்டராதித்தன் பெயரில் இவ்வூர் விளங்கியதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மேலும் இக்கோயில் கல்வெட்டுகளில் திருநாரீஸ்வரம் என வழங்கப்பட்டுள்ளது. இறைவன் திருநாரீஸ்வரத்து மகாதேவர் என வழங்கப்பட்டுள்ளார்.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் குறிப்பிடும்படியான முற்கால சிற்பங்கள் ஏதும் இல்லை.
தலத்தின் சிறப்பு 1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
சுருக்கம்
இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றுடன் எளிமையாகக் காணப்படுகிறது. கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் புராதன சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. இக்கோயில் பராந்தக சோழன் காலக் கோயிலாகும். கோட்டங்கள் வெற்றிடமாக காணப்படுகின்றன. கண்டமங்கலம் என்னும் இவ்வூர் சோழர் காலத்தில் ஸ்ரீகண்டராதித்த மதுராந்தக மங்கலம் என்ற பெயரில் விளங்கியது. செம்பியன் மாதேவியின் கணவனும், உத்தமசோழனின் தந்தையும், மேற்கெழுந்தருளிய சிவஞானியுமான கண்டராதித்தன் பெயரில் இவ்வூர் விளங்கியதை இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
கண்டமங்கலம் திருநாரீஸ்வரத்து மகாதேவர் கோயில்
கோயிலின் அமைப்பு இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றுடன் எளிமையாகக் காணப்படுகிறது. கோயில் இடிந்த நிலையில் கூரையின்றி உள்ளது. சதுரமான கருவறை அமைந்துள்ளது. கருவறையின் தென்புற தாங்குதளத்தில் கல்வெட்டுகள் உள்ளன. இது முதலாம் பராந்தகன் காலக் கோயிலாகும்.
பாதுகாக்கும் நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் பெருமுக்கல் சீதாகுகை, உலகாபுரம் சிவன் கோயில், உலகாபுரம் விஷ்ணு கோயில், கண்டராதித்தப் பேரேரி, காலகண்ட பேரேரி, ஷகாளி கோயில், அய்யனார் கோயில்
செல்லும் வழி சென்னையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் விழுப்புரம் வட்டத்தில் உள்ள கண்டமங்கலம் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
கண்டமங்கலம் திருநாரீஸ்வரத்து மகாதேவர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் கண்டமங்கலம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திண்டிவனம், விழுப்புரம், பாண்டிச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி விழுப்புரம், பாண்டிச்சேரி விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 99
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்