வழிபாட்டுத் தலம்
திருக்கொழம்பியம் கோழம்பநாதர் கோயில் (கோகிலேசுவரர் கோயில்)
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருக்கொழம்பியம் கோழம்பநாதர் கோயில் (கோகிலேசுவரர் கோயில்) |
|---|---|
| வேறு பெயர்கள் | திருக்கோழம்பம் |
| ஊர் | திருக்கொழம்பியம் |
| வட்டம் | திருவிடைமருதூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| தொலைபேசி | 04364-232055, 232005, 9367728984 |
| உட்பிரிவு | 1 |
| தாயார் / அம்மன் பெயர் | சௌந்தரநாயகி |
| திருக்குளம் / ஆறு | மது தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் |
| ஆகமம் | சிவாகமம் |
| வழிபாடு | ஒரு கால பூசை |
| திருவிழாக்கள் | மகாசிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகைத் திருநாள், மார்கழி திருவாதிரை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / செம்பியன் மாதேவியார் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இக்கோயில் முகப்பு வாயிலில் மேலே அமர்ந்த நிலையில் சிவன் பார்வதியும், அவர்களின் ஒருபுறம் விநாயகரும், மறுபுறம் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும் சுதை வடிவில் காணப்படுகின்றனர். கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் தெற்கில் தென்முகக்கடவுள், வடக்கில் நான்முகன், தெற்கில் நடராசரும், வடபுற அர்த்தமண்டபத்து வெளிப்புறக் கோட்டத்தில் துர்க்கை, அர்த்தமண்டப தென்புற கோட்டத்தில் விநாயகர் ஆகிய திருவுருவங்கள் காணப்படுகின்றன. மேலும் பஞ்சரக் கோட்டங்களில் சட்டை நாதரும் பிட்சாடனரும் காட்சியளிக்கின்றனர். கருவறையில் இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். இத்தல இலிங்கத்தின் பாணம் மிகவும் பெரியது. இது சோழர்கால படைப்பாகும். |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தேவாரத்தலம். சோழர் காலக் கற்றளி. |
|
சுருக்கம்
திருக்கோழம்பம் - திருக்குழம்பியம் கோழம்பநாதர் கோயில், அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற திருக்கோயிலாகும்.. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 35ஆவது சிவத்தலமாகும். இக்கோயில் கோகிலேசுவரர் கோயில் என்று மக்களால் வழக்கில் வழங்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள இறைவன் கோழம்பநாதர், இறைவி சௌந்தரநாயகி.இக்கோயில் சோழர்கால கற்றளியாகும். முற்காலச் சோழர்களின் கலைப்பாணியைக் கொண்டுள்ளது. கண்டராதித்தன் செம்பியன்மாதேவியார் கட்டிய திருக்கோயில்களில் இத்தலமும் குறிப்பிடத்தக்கது. அம்பிகை ஒரு சமயம் சாபத்தின் காரணமாக பசு வடிவம் பெற்று பூவுலகில் பல தலங்களில் இறைவனை வழிபட்டாள். அத்தகைய தலங்களில் திருக்கோழம்பம் தலமும் ஒன்று. அவ்வாறு பசு வடிவில் வழிபட்ட போது பசுவின் காற்குளம்பு இடறியபோது வெளிப்பட்ட இத்தல இறைவன் கோகிலேசுவர் என்று பெயர் பெற்றார்.
|
|
திருக்கொழம்பியம் கோழம்பநாதர் கோயில் (கோகிலேசுவரர் கோயில்)
| கோயிலின் அமைப்பு | ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் உள்ளது. முகப்பு வாயிலுக்கு எதிரே பிரம்ம தீர்த்தம் உள்ளது. வாயில் வழி உள்ளே நுழைந்தால் ஒரு நீண்ட பாதையை அடுத்துள்ள மூன்று நிலை கோபுரம் காணப்படுகிறது. கோபுரத்திற்கு முன்னால் நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோபுரம் கடந்து உட்சென்றால் மகாமண்டபத்தில் நடராஜர் சபை உள்ளது. உள் சுற்றில் விநாயகர், அப்பர், முருகன், கஜலட்சுமி பைரவர் ஆகிய திருமுன்கள் அமைந்துள்ளன. தொடர்ந்து அர்த்தமண்டபம் தூண்களுடன் காணப்படுகின்றது. கருவறை சதுர வடிவில் உள்ளது. கருவறை விமானம் சோழர்கால கலைப்பாணியைக் கொண்டு விளங்குகிறது. இத்தல இலிங்கத்தின் பாணம் மிகவும் பெரியது. இது சோழர்கால படைப்பாகும். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில், கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில், திருநீலக்குடி |
| செல்லும் வழி | கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடியை அடுத்துள்ள எஸ்.புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கிருந்து வடக்கில் திருக்குழம்பியத்திற்குச் செல்லும் தனிப்பாதையில் 2 கி.மி. சென்றால் கோயிலையடையலாம். திருவாவடுதுறை கோயிலில் இருந்தும் தெற்கே சுமார் 4 கி.மீ. வாகனம் மூலம் பயணம் செய்தும் இத்தலத்தை அடையலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை |
திருக்கொழம்பியம் கோழம்பநாதர் கோயில் (கோகிலேசுவரர் கோயில்)
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | திருக்குழம்பியம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | திருவாவடுதுறை |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | திருவாவடுதுறை வட்டார விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 115 |
| பிடித்தவை | 0 |