வழிபாட்டுத் தலம்
பூண்டி புதுமை மாதா திருத்தலம்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | பூண்டி புதுமை மாதா திருத்தலம் |
|---|---|
| வேறு பெயர்கள் | ராணி இம்மாகுலேட் மேரி தேவாலயம், பூண்டி மாதா கோவில் |
| ஊர் | பூண்டி |
| வட்டம் | திருக்காட்டுப்பள்ளி |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| உட்பிரிவு | 8 |
| தாயார் / அம்மன் பெயர் | மேரி மாதா |
| தலமரம் | கிறிஸ்துமஸ் மரம் |
| ஆகமம் | வேதாகமம் |
| வழிபாடு | ஞாயிறு மற்றும் முக்கிய நாட்கள் : காலை : 6.00 மணி, 8.30 மணி ; முற்பகல் : 11.15 மணி ; மாலை:5.15 மணி மற்ற நாட்கள் : காலை :6.00 மணி; முற்பகல் :11.15 மணி; மாலை:5.15 மணி |
| திருவிழாக்கள் | கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு |
| காலம் / ஆட்சியாளர் | 1714-1720 |
| சுவரோவியங்கள் | தேவாலயத்தின் சாளரத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளில் கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் வரையப்பட்டுள்ளன. |
| சிற்பங்கள் | பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் 1858ஆம் ஆண்டில் பிப்ரவரி 11 ஆம் நாள் அன்னை மரியா பெர்னதெத் என்ற சிறுமிக்கு காட்சி தந்து 'நாமே அமல உற்பவம்" என்று சொல்லி மக்களை செபிக்கும்படி கேட்டுக்கொண்டார். லூர்துநகரில் மாதா திருக்காட்சி தந்தார். இதன் நினைவாக அதே ஆண்டில் அதே தோற்றத்தோடு வடிவமைக்கப்பெற்ற மூன்று மாதா சிற்பங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இவற்றில் ஒன்றுதான் பூண்டிமாதா ஆலயத்தில் வைக்கப்பட்டது. 144 ஆண்டு பழமை வாய்ந்த அந்த மாதா சிற்பம் பூண்டி புதுமை மாதா என்று மக்களால் போற்றப்படுகிறது. |
| தலத்தின் சிறப்பு | 300 ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாட்டில் உள்ள 4 பசிலிக்காக்களுள் பூண்டி மாதா பேராலயம் ஒன்றாகும். |
|
சுருக்கம்
தமிழ்நாட்டில் உள்ள 4 பசிலிக்காக்களுள் பூண்டியும் ஒன்றாய் விளங்குகிறது. (1714-1718) 18- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறித்துவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் (Fr. Constentine Joseph Beschi J) முயற்சியால் கட்டப்பட்டது. இப்பொழுது இருக்கும் கோவிலின் வடிவம் அருட்தந்தை லூர்து சேவியரால் புனரமைக்கப்பட்டது. இத்திருத்தலம் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் உத்தரவு பெற்றதன் பின் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ஆம் தேதி பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டது.
|
|
பூண்டி புதுமை மாதா திருத்தலம்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தென்னிந்திய கத்தோலிக்க திருச்சபை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேசுவரர் கோயில், கீழையூர் கடைமுடிநாதர் கோயில் |
| செல்லும் வழி | பூண்டி மாதா கோவில் தஞ்சாவூரில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் வடமேற்கில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே பூண்டி என்னும் ஊரில் கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இப்பேராலயத்தை திருச்சி - செங்கிப்பட்டி- திருக்காட்டுப்பள்ளி மார்க்கமாகவும், திருச்சி - இலால்குடி - செங்கரையூர் மார்க்கமாகவும், தஞ்சை - பூதலூர் மார்க்கமாகவும் வந்தடையலாம். |
| கோவில் திறக்கும் நேரம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 57 |
| பிடித்தவை | 0 |