வழிபாட்டுத் தலம்
ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருவாடானை, திருஆடானை |
| ஊர் | திருவாடானை |
| வட்டம் | திருவாடானை |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | ஆடானை நாதர், ஆதிரத்தினேசுவரர், அஜகஜேஸ்வரர் |
| தாயார் / அம்மன் பெயர் | சிநேகவல்லி, அம்பாயி அம்மை |
| தலமரம் | வில்வம் |
| திருக்குளம் / ஆறு | சூரிய புஷ்கரிணி, க்ஷிர குண்டம் தீர்த்தம் |
| வழிபாடு | ஆறுகால பூசை |
| திருவிழாக்கள் | வைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள், ஆடிப்பூரத் திருவிழா 15 நாள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.6-ஆம் நூற்றாண்டு / பாண்டியர், சேதுபதி |
| சிற்பங்கள் | உள் திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், 63 நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, வருணலிங்கம், விஷவநாதர், சண்டிகேஸ்வரர், நடராஜர், நால்வர், பைரவர், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன. சுக்கிர தோஷ நிவர்த்தித் தலமாக விளங்குவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வெள்ளிக்கிழமை தோறும் இத்தலத்தில் சுக்கிர தோஷ நிவர்த்திக்காக விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தின் தீர்த்தங்கள் க்ஷீரகுண்டம், வருணதீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம் ஆகியவை. இத்தல முருகப்பெருமான ஓரு திருமுகமும் நான்கு கரங்களும் கொண்டு இரு தேவியர் உடனிருக்க மயிலுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இவர் சுமார் 5 அடி உயரத்துடன் கம்பீரமாக உள்ளார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. |
| தலத்தின் சிறப்பு | தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். பாண்டிய நாட்டுத் தலங்களில் இது 9வது தலம். |
|
சுருக்கம்
திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு மாநிலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரினை திருஆடானை என்றும் அறிவர். பாண்டிய நாட்டுத் திருத்தலங்களில் 9வது சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற 274 திருத்தலங்களில் இது 199வது தலமாகும். திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பாடியுள்ளார். பாண்டி நாட்டுப் பாடல் பெற்ற 14 தலங்களில் இத்தலம் தனித்தன்மை வாய்ந்தது.
|
|
ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்
| கோயிலின் அமைப்பு | சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இக்கோவில் 130 அடி உயரம் உள்ள 9 நிலைகளை உடைய அழகிய சுதைச் சிற்பங்களோடு கூடிய ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. நீண்ட மதில் சுவர்களும், பெரிய வெளிப் பிரகாரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை உடைய மண்டபமும் உடைய இக்கோவில் பாண்டிய நாட்டு தேவார சிவஸ்தலங்களில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மாசி மாதத்தில் சூரியஒளி மூலவர் மற்றும் அம்பாள் மீது விழும்படி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருப்புல்லாணி, இராமேஸ்வரம், நாகநாதர் கோயில், இராமநாதபுரம் அரண்மனை, தனுஷ்கோடி, சேதுபாலம், பாம்பன் பாலம் |
| செல்லும் வழி | காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வழியாக சுமார் 42 கி.மி. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து தொண்டி சாலையில் காளையார்கோவில் வழியாக சுமார் 50 கி.மி. தொலைவிலும் திருவாடானை தலம் உள்ளது. பேருந்து வசதிகள் காரைக்குடி, சிவகங்கை மற்றும் தேவகோட்டையில் இருந்து இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்திலிருந்தும் இங்கு வர சாலை வசதி உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 -12.00 முதல் மாலை 4.00-8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 11 May 2018 |
| பார்வைகள் | 250 |
| பிடித்தவை | 0 |