Back
வழிபாட்டுத் தலம்
திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் திருநீர்மலை
ஊர் திருநீர்மலை
வட்டம் பல்லாவரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் நீர் வண்ணன், நீலமுகில் வண்ணன்
தாயார் / அம்மன் பெயர் அணிமாமலர் மங்கை
திருக்குளம் / ஆறு மணிகர்ணிகா தடாகம், ஷீர புஷ்கரணி காருண்ய புஷ்கரணி, ஸித்த புஷ்கரணி ஸவர்ண புஷ்கரணி
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர்
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் பாடல் பெற்ற திருப்பதி.
சுருக்கம்
பூலோகத்தில் அவதாரம் முடிந்தபின் வைகுண்டத்திற்கு திரும்பும் காட்சி இங்கு ஸேவையாகிறது. அதாவது அமர்ந்த நிலையில் – நரசிம்மராக, நின்ற நிலையில் – நீர்வண்ணராக, சயன நிலையில் – ரெங்கநாதனாக, நடந்த நிலையில் - உலகளந்த திரிவிக்ரமனாக, அதாவது மேலே கண்ட அவதாரங்களின் முடிவில் எம்பெருமான் நேராக மீண்டும் வைகுண்டம் சென்று விடுகிறார். அவதார ரகஸ்யம் முடிந்துவிடுகிறது. இந்த ஸ்தலம் ஆயுள் விருத்தியைத் தரக்கூடியது. திருமணப் பிராப்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கு செய்யக் கூடிய புண்ணியங்கட்கு (தர்மங்கட்கும் யாகங்கட்கும் 100 மடங்கு பலம் அதிகரிப்பதால்) பலமான பலன் கிடைக்கிறது.இங்கு செய்யப்படும். ஆயுள் விருத்தி ஹோமங்களும், திருமணத்தடை அல்லது திருமணம் நடைபெறாமல் இருத்தல் போன்றன நீங்கி திருமணம் விரைவில் நடக்க இப்பெருமானிடம் வேண்டும் வேண்டுதல்கள் விரைவில் கைகூடுகின்றன என்பது இங்கு காணப்படும் அதிசயிக்கத்தக்க உண்மையாகும். இங்கு இராமபிரான் கல்யாணராமனாக அதாவது வனம் ஏகும் முன் உள்ளசீத்தா ராமனாக திருமணக் கோலத்தில் காட்சி தருவதும் (திருமண வேண்டுதல்கள் நிறைவேறும்)நிகழ்ச்சிக்கு ஒரு காரணமாகும். 108 திவ்ய தேசங்களில் சோளிங்கபுரம் போல் இப்பகுதி வாழ் மக்களும் இதையொரு பிரார்த்தனை ஸ்தலமாகவே கொண்டுவழி பாடியாற்றுகின்றனர்.பூலோக வைகுண்டமென போற்றப்படும் திருவரங்கம், திருமலை, திருக்கோட்டியூர் ஆகிய ஸ்தலங்கட்கு உண்டான புகழோடு இத்தலத்தையும் இணைத்துப் பாசுரித்திருக்கிறார் பூதத்தாழ்வார். திருக்கோவிலூர் அஹோபிலம் (சிங்கவேள் குன்றம்) திருவரங்கம், அயோத்தி ஆகிய திவ்ய தேசங்களை ஒரு சேர சேவித்த உணர்வை இம்மலையில் உள்ள பெருமாள்களை தரிசித்து திரும்பும்போது உணர முடிகின்றது. திருமங்கையாழ்வாராலும், பூதத்தாழ்வாராலும் 20 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தபோது நீர்சூழ்ந்து கொண்டதால் 6 மாத காலம் அவர் தங்கியிருந்த மந்திரகிரி என்னும் ஊர் இங்கிருந்து சமீப தொலைவில் உள்ளது.
திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள்
செல்லும் வழி சென்னைக்கு அருகாமையிலுள்ள பல்லாவரம் என்னும் ஊரிலிருந்து மேற்கில் சுமார் 5 கி.மீ. தொலவைில் இக்கோயில் அமைந்துள்ளது.. தற்போது சென்னையிலிருந்து பேருந்துகள் உள்ளன.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் பல்லாவரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் பல்லாவரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி தாம்பரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Nov 2018
பார்வைகள் 35
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்