வழிபாட்டுத் தலம்
திருநறையூர் நம்பி பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருநறையூர் நம்பி பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | மணிமாடம், நாச்சியார் கோயில் |
| ஊர் | திருநறையூர் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | திருநறையூர் நம்பி, ஸ்ரீனிவாசன், வ்யூகவாசுதேவன், சுகந்தவனநாதன் |
| தாயார் / அம்மன் பெயர் | வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார் |
| தலமரம் | வில்வ விருட்சம், வகுளம் எனப்படும் மகிழ மரம் |
| திருக்குளம் / ஆறு | மணிமுத்தா புஷ்கரணி, ஸங்கர்ஷன தீர்த்தம், பிரத்யுமன தீர்த்தம், அனிருத்தன் தீர்த்தம், ஸாம்ப தீர்த்தம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | பெரிய திருவடி தரிசனம் என்ற கருடசேவை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி. |
|
சுருக்கம்
திருமங்கையாழ்வாரிடம் மடல் பரிசு பெற்றது இத்தலத்திற்குண்டான தனிச் சிறப்பாகும். 108 திவ்யதேசங்களில் இத்தகு சிறப்பு வேறெந்த தலத்திற்கும் இல்லை. திவ்ய தேசத்தின் பெயரோடு நம்பி என்று சேர்த்தழைக்கப்படும் திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று. இவ்வகையில் திருக்குறுங்குடி நம்பியும், திருநறையூர் நம்பியும் மிகு புகழ் பெற்றவர்கள். இப்பெருமானை நம்பி என்று மொழிந்தார் திருமங்கையாழ்வார். நம்பி என்றால் பூரணர் என்பது பொருள். நற்குணங்களால் நிறைந்தவர் என்பதும் பொருள். வைணவசம்பிரதாயத்தில் நம்பி என்னும் சொல் ஆச்சாரியர்களைக் குறிக்கும். இத்திருப்பெயரை முதலி மதுரகவியாழ்வார் தமது ஆச்சார்யரான நம்மாழ்வாருக்குச் சூட்டினார். “நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால் அன்னிக்கே அமுதூறும் என் நாவுக்கே” என்றார்.
|
|
திருநறையூர் நம்பி பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | இத்தலம் சிறிதும் பெரிதுமான 16 கோபுரங்களை உடையது. ராஜகோபுரம் 5 அடுக்கும் 76 அடி உயரமும் கொண்டதாகும். மூலஸ்தானத்திற்கு (கருவறைக்கு) மேல் உள்ள மானமும், கோபுர வடிவிலேயே அமைந்திருக்கிறது. இது போன்ற அமைப்பினை வேறு திவ்ய தேசங்களில் அதிகமாக காணமுடியாது. கருவறைக்கு மேல் உள்ள விமானம் கோபுரம் போல் அமைந்திருப்பது இங்கும் திருவல்லிக்கேணியிலும் மட்டுமே. இத்தலம் மாடக்கோவில் அமைப்பில் உள்ளது. கோபுர வாயிலினின்று நோக்கினால் இப்பெருமான் ஒரு மாடத்தின் மேல் பொலிந்து நிற்பது போன்று தெரியும். இக்கருவறையின் அமைப்பும் அதில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் தோற்றமும் ஒரு சிறிய வடிவமைக்கப்பட்ட மலைமேல் எழுந்தருளியிருப்பது போல் திருமங்கைக்கு காட்சியானது அதனால் திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் மன்னும் மணி மாடக் கோயில் என்று இத்தலத்தை புகழ்கிறார். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | தண்டலம் சிவன் கோயில், திருப்பாண்துறை, விசலூர் பெருமாள் கோயில் |
| செல்லும் வழி | இத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 4 மைல் தொலைவில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 23 Nov 2018 |
| பார்வைகள் | 96 |
| பிடித்தவை | 0 |