வழிபாட்டுத் தலம்
சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில் |
|---|---|
| வேறு பெயர்கள் | திருவெஃகா |
| ஊர் | திருவெஃகா |
| வட்டம் | காஞ்சிபுரம் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | யாதோத்தகாரி |
| தாயார் / அம்மன் பெயர் | கோமளவல்லி நாச்சியார் |
| திருக்குளம் / ஆறு | பொய்கை புஷ்கரிணி |
| வழிபாடு | காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | சொன்ன வண்ணம் செய்த பெருமாள் மேற்கு நோக்கிய திருக்கோலம். |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் |
|
சுருக்கம்
பொய்கையாழ்வார் அவதாரம் செய்த தலமாகும் இது. இங்குள்ள பொய்கையொன்றின் பொற்றாமரையில் அவதாரம் செய்தமையால் பொய்கையாழ்வாரானார். எல்லா ஸ்தலங்களிலும் சயன திருக்கோலமானது இடமிருந்து வலமாக அமைந்திருக்கும், ஆனால் இங்கு மட்டும் பெருமாள் வலமிருந்து இடமாகச் சயனித்துள்ளார். இதற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன. பக்தர்களும், ஆச்சார்யர்களும் மண்டிக்கிடந்த ஸ்தலமாகும் இது. பொய்கையாழ்வார் இங்கு தான் அவதாரம் செய்தார். திருமழிசையாழ்வார் நெடுங்காலம் இங்கு தங்கி இருந்தார். கணிகண்ணன் இப்பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து உய்ந்தவர். திருமங்கை உட்பட ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து பாமாலையிட்டுள்ளனர். மணவாள மாமுனிகள் இங்கு ஒரு வருட காலம் தங்கியிருந்து பகவத் விஷயமாக இங்கு உபன்யாசம் நிகழ்த்தியுள்ளார். பிள்ளை லோகாச்சார்யர் இங்கு பெரும்போது போக்கியுள்ளார். இவருக்கு இங்கு தனிச் சன்னதி உள்ளது. பேயாழ்வார் 4 பாசுரங்களாலும் நம்மாழ்வாரும், பொய்கையாழ்வாரும் தலா ஒவ்வொரு பாசுரத்தாலும், திருமழிசை 3 பாசுரங்களாலும் திருமங்கையாழ்வார் 6 பாசுரங்களாலும் இப்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்கள். சங்க காலத்திலும் இத்தலம் மிகப்புகழ்பெற்று இருந்தது. சங்க இலக்கியங்களில் இத்தலம் குறிக்கப்படுகிறது. நம்மாழ்வார் தமது முதல் பிரபந்தமான திருவிருத்தத்தில் கோயில், திருமலை, திருவெஃகா, ஆகிய 3 திவ்ய தேசங்களை மட்டும் பாடியிருப்பதால் பெருமாள் கோயில் என்பது இத்தலத்தையேக் குறிக்கும் என்று ஆய்வாளர்கள் சிலர் கருத்துக்கொண்டுள்ளனர். தொன்மை மிக்க இத்தலத்தையும் இங்கு எழுந்தருளிய பெருமாளையும் கிடந்தான் என்ற சொல்லாலே ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். அதாவது கிடந்தான் என்னும் சொல் இப்பெருமாளைக் குறிப்பதாகவே பூச்வாச்சார்யர்கள் பொருள் கொண்டுள்ளனர். தலத்தின் பெயரைக் (திருவெஃகாவை) குறிப்பிடாமல் கிடந்தான் என்ற சொல்லுக்கே இப்பெருமாளையும் இத்தலத்தையும் மங்களாசாசனம் செய்துள்ளதாகக் கொண்டுள்ளனர்.
|
|
சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் விமானம் வேதஸார விமானம் என்னும் வகையைச் சார்ந்தது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | காஞ்சி காமாட்சியம்மன் கோயில், வரதராஜப்பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் |
| செல்லும் வழி | காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள சின்னக் காஞ்சிபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை |
சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோவில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | காஞ்சிபுரம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | காஞ்சிபுரம் |
| அருகிலுள்ள விமான நிலையம் | சென்னை - மீனம்பாக்கம் |
| தங்கும் வசதி | காஞ்சிபுரம் விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 23 Nov 2018 |
| பார்வைகள் | 31 |
| பிடித்தவை | 0 |