Back
வழிபாட்டுத் தலம்
திருநாங்கூர் நந்தா விளக்குப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருநாங்கூர் நந்தா விளக்குப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் திருமணிமாடக் கோயில்
ஊர் திருநாங்கூர்
வட்டம் சீர்காழி
மாவட்டம் நாகப்பட்டினம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் நாராயணன்
தாயார் / அம்மன் பெயர் புண்டரீகவல்லி
திருக்குளம் / ஆறு இந்திர புஷ்கரணி, ருத்ர புஷ்கரணி
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் கருடசேவை
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு / பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர-நாயக்கர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் நந்தா விளக்குப் பெருமாள் நாராயணன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். புண்டரீகவல்லித் தாயார் தனியான திருமுன்னில் அமர்ந்த கோலம்.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி.
சுருக்கம்
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் திருநாங்கூரிலேயே உள்ளது. வேத புருஷன் ‘ஸ்தயம் ஞான மநந்தம் பிரஹ்மம்’ என்ற பிரஹ்ம்ம ஸப்தத்தினால் ஸ்ரீமந் நாராயணனைக் கூறுகிறான். அதை அப்படியே தமிழில் திருமங்கை, நந்தா விளக்கே, அளத்தற்கரியாய் என்று மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீமந் நாராயணனை விளக்கே என்று அழைக்கிறார். ஒருவராலும் தூண்டப்படாமல் தானாகவே ஒளியுடன் திகழும் தூண்டா விளக்காகும். அதாவது நித்யமான ‘ஸ்வயம் ப்ரகாசமான ஞானத்தை உடையவன்’ என்பது பொருள். அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணி மாடக்கோயில் எனப்பெயர் வந்ததாகவும் கூறுவர்.
திருநாங்கூர் நந்தா விளக்குப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு மிகச்சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ள இக்கோவில் மாடக்கோவில் என்று சொல்லுமாற்றான் சிறந்து விளங்குகிறது. ப்ரணவ விமானம் என்னும் கட்டிடப் பாணியைக் கொண்டு விளங்குகிறது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில், வன் புருஷோத்தமன் கோயில், வைகுண்டநாதர் கோயில், மதங்கீசுவரர் கோயில்
செல்லும் வழி இத்தலம் சீர்காழியிலிருந்து கிழக்கே 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை
திருநாங்கூர் நந்தா விளக்குப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருநாங்கூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி சீர்காழி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 23 Nov 2018
பார்வைகள் 86
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்