Back
வழிபாட்டுத் தலம்
திருஆதனூர் ஆண்டளக்குமையன் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருஆதனூர் ஆண்டளக்குமையன் கோயில்
வேறு பெயர்கள் திருஆதனூர், பார்க்கவ க்ஷேத்திரம்
ஊர் திருஆதனூர்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் ஆண்டளக்கும் ஐயன்
தாயார் / அம்மன் பெயர் பார்க்கவி, மந்திர பீடேச்வரி கமலவாஸிநி. ரங்கநாயகி
தலமரம் புன்னை, பாடலி
திருக்குளம் / ஆறு சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
ஆகமம் பாஞ்சராத்திரம்
திருவிழாக்கள் பங்குனி உத்திரம், தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி, உறியடி உற்சவம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு சரபோஜி மன்னருக்கும், இத்தலத்திற்கும் தொடர்புகள் இருந்ததை கல்வெட்டுக்களிலும், ஓலைச்சுவடிகளாலும் அறியமுடிகிறது.
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் ஸ்ரீ ஆண்டளக்குமையன் புஜங்க சயனத் திருக்கோலத்தில் தலையின் கீழே மரக்கால், இடது கையில் ஓலை எழுத்தாணி, காலடியில் காமதேனு திருமங்கையாழ்வார், தாயார் ஸ்ரீரங்க நாயகியார், உற்சவர் அழகிய மணவாளன் ஆகிய செப்புத்திருமேனி உருவங்கள் காணப்படுகின்றன. இத்தலத்தில் காமதேனுவுக்கும்,காமதேனுவின் புத்திரி நந்தினிக்கும் சிற்பங்கள் உண்டு.
தலத்தின் சிறப்பு 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருத்தலம்.
திருஆதனூர் ஆண்டளக்குமையன் கோயில்
கோயிலின் அமைப்பு திருஆதனூர் கோயில் மூன்று நிலை இராஜகோபுரத்தைப் பெற்றுள்ளது. இரண்டு பிரகாரங்கள் அமைந்துள்ளன. பிரணவ விமானம் எனப்படும் உண்ணாழிகையின் நடுவே கருவறையில் ஸ்ரீ ஆண்டளக்குமையன் புஜங்க சயனத் திருக்கோலத்தில் தலையின் கீழே மரக்கால், இடது கையில் ஓலை எழுத்தாணி, காலடியில் காமதேனு திருமங்கையாழ்வார், தாயார் ஸ்ரீரங்க நாயகியார், உற்சவர் அழகிய மணவாளன், தீர்த்தம் சூர்ய புஷ்கரணி கோயிலுக்கு தெற்கே தாமரைத்தடாகம் உள்ளது. தாமரைத் தடாகம் திருமகளுக்குரியது. பார்க்கவி என்பது திருமகளின் மற்றொரு பெயர். எனவே இத்தலம் பார்க்கவ க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றது.
பாதுகாக்கும் நிறுவனம் அகோபில மடம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் நரசிம்மபுரம், லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோயில், புள்ளப்பூதங்குடி, சுவாமிமலை
செல்லும் வழி இத்தலம் சுவாமி மலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவு உள்ளது. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த ஊருக்கு நேராகவே பேருந்து வசதி உள்ளது. இத்தலத்து எம்பெருமானைச் சேவித்துவிட்டு இங்கிருந்து புள்ளம் பூதங்குடி திவ்ய தேசத்திற்கு நடந்தே சென்றுவிடலாம்.
கோவில் திறக்கும் நேரம் காலை 7.00 -12.00 முதல் மாலை 5.00-8.00 வரை
திருஆதனூர் ஆண்டளக்குமையன் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் புள்ளம்பூதங்குடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி சுவாமிமலை, கும்பகோணம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 20 Jul 2017
பார்வைகள் 31
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்