வழிபாட்டுத் தலம்
வடக்குமேடு சிவன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | வடக்குமேடு சிவன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | வடக்குமேடு சிவன் கோயில் |
| ஊர் | வடக்குமேடு |
| வட்டம் | ஆம்பூர் |
| மாவட்டம் | வேலூர் |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | சிவபெருமான் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.12-ம் நூற்றாண்டு |
| கல்வெட்டு / செப்பேடு | இக்கோயில் பிற்காலச் சோழ மன்னருள் ஒருவரான மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டைப் பெற்றுள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் ஆவுடையார் மட்டும் காணப்படுகிறது.கல்லில் புடைப்புச் சிற்பமாக ஆண் தெய்வ உருவமொன்று பொரிந்த நிலையில் உள்ளது. |
| தலத்தின் சிறப்பு | 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. |
|
சுருக்கம்
இக்கோயில் தற்பொழுது வழிபாட்டில் இல்லை. புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கருவறையில் இலிங்கம் பிற சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை.
|
|
வடக்குமேடு சிவன் கோயில்
| கோயிலின் அமைப்பு | இக்கோயில் விமானம் தளம் வரையிலான பகுதி கற்றளியாகவும், அதற்கு மேல் செங்கல்லாலும் கட்டப்பட்டுள்ளது. உபபீடத்துடன் கூடிய விமான தாங்குதளத்தைப் பெற்றுள்ளது. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களோடு கூடிய தேவகோட்டங்கள் காட்டப்பட்டுள்ளன. சிற்ப வேலைப்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. ஒரு தளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. தளப்பகுதி செங்கல் வேலைப்பாடாக அழகுற அமைந்துள்ளது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | வடக்குமேடு ஊராட்சி |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | வேலூர் அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவர் கோயில், அப்துல்லாபுரம் அரண்மனை, அப்துல்லாபுரம் அன்னச்சத்திரம் |
| செல்லும் வழி | வேலூரில் இருந்து ஊசூர் செல்லும் வழியில் அப்துல்லாபுரம், தெள்ளூர் வழியாக வேலூரில் இருந்து பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வடக்கு மேடு என்ற ஊரைத் தாண்டி உள்ள ஏரியினை அடுத்து இக்கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 14 Mar 2019 |
| பார்வைகள் | 31 |
| பிடித்தவை | 0 |