வழிபாட்டுத் தலம்
திருக்குளந்தை மாயக்கூத்தன் திருக்கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருக்குளந்தை மாயக்கூத்தன் திருக்கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | அருள்மிகு மாயக்கூத்தன் பெருமாள் திருக்கோயில், திருக்குளந்தை, தூத்துக்குடி |
| ஊர் | பெருங்குளம் |
| வட்டம் | ஸ்ரீவைகுண்டம் |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | சோர நாதன், ஸ்ரீனிவாஸன் |
| தாயார் / அம்மன் பெயர் | குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி) அலமேலு மங்கைத் தாயார் |
| திருக்குளம் / ஆறு | பெருங்குளம் |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நரசிம்ம ஜெயந்தி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. |
|
சுருக்கம்
நம்மாழ்வாரால் பாடப்பட்டது இத்திருத்தலம்.திருக்குளந்தை யென்றால் யாருக்கும் தெரியாது பெருங்குளம் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் எளிதில் விளங்கும். பெருங்குளம் பெருமாள் கோவில் என்றே இங்கு உறைவோர் கூறுகின்றனர்.இங்கிருந்து கருடாழ்வார் மீது பெருமான் புறப்பட்டு இமயம் சென்றதால் கருடன் இங்கு “உற்சவராகவே” எழுந்தருளியுள்ளார். நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம். இத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூரோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும். அங்கு ஆண்டாள் அவதரித்து எம்பெருமானுக்கே மாலையிடுவேன் என்று மணங்கொண்டாள். அதேபோல் இங்கு கமலாவதி அவதரித்து எம்பெருமானை மணங்கொண்டாள். அங்கு வேதப்பிரான் ஆண்டாளுக்கு தகப்பனராயிருந்தார். இங்கு வேதசாரன் கமலாவிற்கு தகப்பனாயிருந்தார்.
|
|
திருக்குளந்தை மாயக்கூத்தன் திருக்கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | திருப்புளிங்குடி காய்சினவேந்தர் பெருமாள் கோயில், ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோயில், ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் கோயில் |
| செல்லும் வழி | இத்திருத்தலம் திருப்புளிங்குடியிலிருந்து. நேராகச் செல்லும் சாலையில் சுமார் 6 மைல் தொலைவில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 7 மைல் தூரம் ஏரல் செல்லும் பேருந்தில் சென்றும் இறங்கலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 29 Nov 2018 |
| பார்வைகள் | 34 |
| பிடித்தவை | 0 |