Back
வழிபாட்டுத் தலம்
பாண்டவதூதப் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் பாண்டவதூதப் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் திருப்பாடகம்
ஊர் பெரிய காஞ்சி
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் பாண்டவ தூதர்
தாயார் / அம்மன் பெயர் ருக்மணி, சத்தியபாமா
திருக்குளம் / ஆறு மத்ஸய தீர்த்தம்
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் வைகுண்ட ஏகாதசி, இராமநவமி
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள எம்பெருமான்களில் 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமான ரூபத்தில் தன்னை ஏமாற்ற நினைப்பவர்களை ஏமாற்றி விடும் குறிப்பை உணர்த்தும் அழகுத் திருமேனியுடன் திகழும் இவ்வெம்பெருமானை 108 திவ்ய தேசங்களில் மட்டுமன்றி இந்தியாவில் கூட வேறெங்கும் கூட சேவிக்க முடியாது.
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார்பாடல் பெற்ற திருப்பதி.
சுருக்கம்
திருமழிசையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பெரிய காஞ்சி புரத்தில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் உள்ளது. பாடு - மிகப் பெரிய அகம் (இருப்பிடம்) என்ற பொருளில் பாடகம் ஆனதாகக் கூறுவர். ஸ்ரீஇராமானுஜரிடம் வாதப்போரிலே தோற்றுப்போன யக்ஞ மூர்த்தி என்னும் அத்வைதி ஸ்ரீஇராமானுஜரின் உண்மை ரூபம் தெரிந்து அவரிடமே சரணாகதியாகி அவரிடம் சீடரானார். அவருடைய பெயரை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று இராமானுஜர் மாற்றி அவரை விஷ்ணுவின் தொண்டராக்கி விஷ்ணு கைங்கர்யம் செய்ய வைத்தார். இந்த அருளாளப் பெருமாள் ஜீவித்திருந்தது இந்த திவ்யதேசத்தில்தான். இங்கு அவருக்குத் தனி சன்னதியுண்டு. பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய நால்வரால் 6 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்துள்ளனர். நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில், பிள்ளைப் பெருமாளையங்கார் இத்தலத்தைப் பாடியுள்ளார்.
பாண்டவதூதப் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு கருவறையின் அமைப்பை உற்று நோக்கினால் நிலவறையின் மொத்தப்பகுதியை அப்படியே பெயர்த்து தலைக்கு மேல் குவித்து வைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் தோன்றுகிறது. மிக சிறிய அளவில் இச்சன்னதி அமைந்திருந்தாலும், கர்ப்பக்கிரஹத்தின் குவிந்த அமைப்பும், அதனடியில் பிரம்மாண்டமான திருக்கோலத்தில் எம்பெருமான் வீற்றிருப்பதும் ரசித்துப் பார்க்கத் தக்கது மட்டுமன்றி பேராச்சர்யம் தருவதுமாகும். எம்பெருமானின் நின்ற அமர்ந்த கிடந்த திருக்கோலங்கட்கு தொண்டை நாட்டில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களே ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்ததெனச் சொல்லலாம். அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலம் என்றாலே அது ஊரகம், பாடகம், வெஃகா தான் என்று சொல்லாமல் சொல்வதைப் போலவும், எல்லோராலும் - மூன்று திருக்கோலங்கட்கு இந்த மூன்று ஸ்தலங்கள்தான் என்று அறியப்பட்டதாயும், காஞ்சி மண்ணிற்கே தனித்துவமும் முக்கியத்துவமும் பெற்றுத் தந்த தலங்களாக விளங்குகின்றது என உணர முடிகிறது. 108 திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்திற்கு வேங்கடமலையானையும், அமர்ந்த திருக்கோலத்திற்கு பத்ரிநாதனையும், கிடந்த திருக்கோலத்திற்கு திருவரங்கத்து அரங்கனையும் தனித்துவம் படுத்தலாமென்றிருந்தாலும் ஆழ்வார்கள், நின்ற, கிடந்த, இருந்த திருக்கோலங்கட்கு காஞ்சியில் உள்ள இந்த மூன்று ஸ்தலங்களையே குறித்து மங்களாசாசனம் செய்துள்ளனர் என்று கொள்ளலாம். அதாவது நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலமெனில் அவைகள் ஊரகம், பாடகம், வெஃகாதான் பிறவன்று என்றும் உரைக்கலாம்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வைகுண்டப் பெருமாள் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், பச்சைவண்ணப் பெருமாள் கோயில், திருவெகா, திருஊரகம், திருகார்வானம், திருக்காரகம்
செல்லும் வழி காஞ்சி மாநகரிலேயே அமைந்துள்ளது. சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை
பாண்டவதூதப் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி காஞ்சிபுரம் நகர விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Nov 2018
பார்வைகள் 29
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்