Back
வழிபாட்டுத் தலம்
திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)
ஊர் திருக்கோவிலூர்
வட்டம் திருக்கோவிலூர்
மாவட்டம் விழுப்புரம்
தொலைபேசி 9486279990
உட்பிரிவு 2
மூலவர் பெயர் திரிவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)
தாயார் / அம்மன் பெயர் பூங்கோவல் நாச்சியார்
தலமரம் புன்னை
திருக்குளம் / ஆறு பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், ஸ்ரீசக்ர தீர்த்தம்
வழிபாடு விச்வரூபம், திருவனந்தல், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
திருவிழாக்கள் பங்குனி மாதம் பிரம்மோற்சவம் 15 நாட்கள், மாசிமகம் - இவ்விழாவின் போது கடலூருக்கு தோளிலேயே செல்வார் என்பது தனிச்சிறப்பு. புரட்டாசி பவித்திர விழா, நவராத்திரி விழா, சித்திரை-ஸ்ரீராமர் ஜெயந்தி, ஸ்ரீஇராமானுஜர் ஜெயந்தி, வசந்த விழா, வைகாசி-வைகாசி விசாக கருட சேவை, நம்மாழ்வார் சாற்றுமுறை, ஆனி-பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி-திருவாடிப்பூரம், ஆண்டாள் உற்சவம், ஆவணி-ஸ்ரீஜெயந்தி, உறியடி விழா, ஐப்பசி-முதலாழ்வார்கள் சாற்றுமுறை, கார்த்திகை-கைசிக ஏகாதசி உற்சவம், மார்கழி-இராப்பத்து, பகல்பத்து
காலம் / ஆட்சியாளர் கி.பி.15-16-ஆம் நூற்றாண்டு / விஜயநகரர்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் ஓங்கி உலகளந்த பெருமாள் ஸ்ரீசக்கர விமானத்தின் கீழ் நின்ற நிலையில் ஓங்கி உலகளந்தவாறு காட்சியளிக்கிறார். கோயில் திருச்சுற்றில் வேணுகோபாலன், லட்சுமி நாராயணன், வீரஆஞ்சநேயர், லட்சுமி இராகவன், லட்சுமி நரசிம்மர், இராமர், ஆண்டாள், அசுரகுல குரு சுக்கிராச்சாரியார் ஆகியோரது சிற்பங்கள் உள்ளன.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார், திருமங்கையாழ்வார் இவர்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றது. பாடல் பெற்ற வைணவ திவ்ய தேசம்.
சுருக்கம்
திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்சசேத்திரங்களுள் திருக்கோவிலூர் முதலாவது தலமாகும். இக்கோயிலில் உள்ள திரிவிக்கிரமர் உலகளந்த பெருமாள் சிற்பம் போல் உயரமான நின்ற நிலை சிற்பம் வேறு எங்கும் இல்லை எனலாம். புராண காலத்தில் கிருஷ்ணபத்ரா ஆறு தான் இப்பொழுது தென்பெண்ணையாறு எனப் பெயர் பெற்றுள்ளது. வைணவத்தலத்தில் துர்க்கையை காணுதல் அரிது. இத்தலத்தில் விஷ்ணு துர்க்கையை மூலவருக்கு அருகிலேயே காணலாம். திருமங்கையாழ்வார் இந்த துர்க்கையை சேர்த்தே தனது பாடலில் பாடியுள்ளார். இக்கோயிலில் திருமாலின் வடிவம் வலது கையில் சங்கையும் இடது கையில் சக்கரத்தையும் ஏந்தியுள்ளது தனிச்சிறப்பு. வழக்கத்திற்கு மாறாக இது அமைந்துள்ளது நோக்கத்தக்கது. முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் முதலில் இத்தலத்தையே பாடினர். இத்தலத்தில் தான் மூவரும் முக்தியடைந்தனர். இக்கோயிலின் இராஜகோபுரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய இராஜகோபுரமாகும். 5 ஏக்கர் பரப்பளவில் இந்த இராஜகோபுரம் 11 நிலைகள் கொண்டு 192 அடி உயரம் கொண்டுள்ளது. இத்தலம் நடுநாட்டு திருப்பதி எனப்படும். கேரளாவின் திருக்காக்கரையில் வாமனருக்கு ஒரு பெரிய கோயில் உள்ளது. தமிழகத்தில் உலகளந்த பெருமாள் கோயிலே வாமனருக்கு எழுப்பப்பட்ட தனிப்பட்ட கோயிலாகும்.
திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு 192 அடி உயரமுள்ள இராஜகோபுரம், மகாமண்டபம், முகமண்டபம், அர்த்த மண்டபம் பெற்று விளங்குகிறது. கருவறையில் உலகளந்த பெருமாள் மரத்தால் செய்யப்பட்டவராக உள்ளார். கருவறைச் சுற்றில் பல சிறுகோயில்கள் அமைந்துள்ளன. உற்சவராக வேணுகோபாலன் அருள்பாலிக்கிறார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ஆதிதிருவரங்கம் பெருமாள் கோயில், சிவலோக நாதர் கோயில்
செல்லும் வழி விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ. தூரத்தில் திருக்கோவிலூர் உள்ளது. பண்ருட்டி-வேலூர் வழியில் திருக்கோவிலூர் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை
திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் விழுப்புரம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் விழுப்புரம்
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி, சென்னை - மீனம்பாக்கம்
தங்கும் வசதி விழுப்புரம் விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 May 2017
பார்வைகள் 47
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்