Back
வழிபாட்டுத் தலம்
திருவேற்காடு வேதபுரீசுவரர் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் திருவேற்காடு வேதபுரீசுவரர் கோயில்
வேறு பெயர்கள் திருவேற்காடு
ஊர் திருவேற்காடு
வட்டம் பூவிருந்தவல்லி
மாவட்டம் திருவள்ளூர்
தொலைபேசி 044 - 26800430, 26272487
உட்பிரிவு 1
தாயார் / அம்மன் பெயர் பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை
தலமரம் வெள்வேலமரம்
திருக்குளம் / ஆறு வேத தீர்த்தம், வேலாயுத தீர்த்தம், பாலி நதி
வழிபாடு நான்கு கால பூசை
திருவிழாக்கள் மகாசிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.7-12-ஆம் நூற்றாண்டு / பல்லவர்கள், சோழர்கள்
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். கருவறையின் பின்புறத்தில் புடைப்புச் சிற்பவடிவில் சோமாஸ்கந்தர் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. கருவறையை நோக்கி இருக்கும் நந்தி சிறிதாக உள்ளது. கருவறை விமானத்தின் சுவரில் அமைந்துள்ள தேவகோட்டங்களில் முறையே தெற்கில் தென்முகக் கடவுளும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கில் நான்முகனும் காட்டப்பட்டுள்ளனர். அர்த்தமண்டப வடபுற கோட்டத்தில் துர்க்கையும், தென்புறக் கோட்டத்தில் கணபதியும் உள்ளனர். மேலும் கருவறையின் திருச்சுற்றின் மேற்குப் புறத்தில் காசி விசுவநாதர், விசாலாட்சி, அநபாய சோழன், சேக்கிழார், வடக்கே சண்டிகேசுவரர், சைவ சமயக் குரவர்கள் நால்வர், 63 நாயன்மார்கள், சந்திரன், சூரியன் மற்றும் தாமரை வடிவில் நவகிரகங்கள் உள்ளனர். 'ஸ்கந்த லிங்கம்' ஒன்று முருகனுக்கு முன்பாகவே வைக்கப்பட்டுள்ளது.
தலத்தின் சிறப்பு 1300 ஆண்டுகள் பழமையானது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
சுருக்கம்
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் தொண்டை நாட்டு பாடல் பெற்ற தலங்களுள் இது 23-வது தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்றது. அகத்தியருக்கு இறைவன் திருமணக் கோலம் காட்டியருளியதாகவும், நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு எனப்பெயர் பெற்றதாகவும் என தலபுராணம் கூறுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த திருத்தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
திருவேற்காடு வேதபுரீசுவரர் கோயில்
கோயிலின் அமைப்பு திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்பாக திருக்குளம் காணப்படுகின்றது. இக்கோயில் ஐந்து நிலை இராஜகோபுரத்தைப் பெற்றுள்ளது. தொடர்ந்து நந்தி, பலிபீடம், கொடிமரம் வரிசையாக உள்ளன. சிவன் பார்வதியுடன் கணபதி எழுந்தருளியுள்ள சிறு திருமுன் ஒன்று இங்குள்ளது. மூலவரின் கருவறை விமானம் தூங்கானை மாடக் கோயிலாகும். பாலாம்பிகை தெற்கு நோக்கியபடி தனி திருமுன் கொண்டுள்ளார். அருகில் நடராஜர், சிவகாமி அம்பாள் உள்ளனர். அம்மன் திருமுன் அருகில் பைரவர் உள்ளார். சனீஸ்வரருக்குத் தனி திருமுன் பெரிதாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர், மூர்க்க நாயனாருக்கும் தனி திருமுன் உள்ளன. முருகப் பெருமான், சுப்பிரமணியராக தனி திருமுன் ஒன்றில் காட்சியளிக்கிறார்.
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், மாங்காடு வெள்ளீசுவரர் கோயில், திருமழிசை பெருமாள் கோயில்
செல்லும் வழி சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ள வேலப்பன்சாவடியிலிருந்து வலது புறம் பிரியும் ஒரு கிளைச்சாலை வழியாக சுமார் 3 கி.மீ. சென்றால் இந்த தலத்தை அடையலாம். திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை
திருவேற்காடு வேதபுரீசுவரர் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருவேற்காடு
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் திருவேற்காடு
அருகிலுள்ள விமான நிலையம் மீனம்பாக்கம்
தங்கும் வசதி பூந்தமல்லி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 28
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்