வழிபாட்டுத் தலம்
சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | பக்தவத்சலப் பெருமாள் |
| ஊர் | சேரன்மகாதேவி |
| வட்டம் | அம்பாசமுத்திரம் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | பக்தவத்சலப் பெருமாள் |
| திருக்குளம் / ஆறு | தாமிரவருணி |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.14-ஆம் நூற்றாண்டு / பிற்காலப் பாண்டியர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறை விமானத்தின் தளங்களில் சுதையாலான திருமால் சிற்பங்கள் காணப்படுகின்றன. சிம்மம் தாங்குதளம் கொண்ட தூண்கள் உள்ளன. மேலும் தூண்களில் அடியவர், அரசன், அரசியார், பணிப்பெண், இராமன், இலக்குவன், சீதை, வீரன், அருச்சுனன், சிவன், அனுமன், கண்ணாடிப்பெண், பணிப்பெண், முதியவர் ஆகிய பல புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபங்களிலுள்ள தூண்களில் உள்ள இச்சிற்பங்கள் மிகுந்த எழில் வாய்ந்தவையாக விசயநகரர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. |
| தலத்தின் சிறப்பு | 800 ஆண்டுகள் பழமையானது. பாண்டியர், விசயநகரர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. |
|
சுருக்கம்
கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர், விசயநகரர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் மிகப்பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இக்கோயில் திருமாலுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். அழகிய பெரிய திருமதிலும், திருச்சுற்று மாளிகையும் கொண்டுள்ளது. ஆற்றினை ஒட்டி அழகிய தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இம்மண்டபம் இறைவனின் தீர்த்தவாரியின் போது தங்குமிடமாக இருக்கலாம். இக்கோயில் கருவறை விமானம் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், மேற்பகுதி சுதையினாலும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்களைக் கொண்டதாக உள்ளது. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முக மண்டபத்திலும் மகாமண்டபத்திலும் உள்ள தூண்களில் பலவித புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் வைணவ சமயத்தைச் சார்ந்தவையாக இருப்பினும் ஒன்றிரண்டு சிவபெருமானைக் குறித்தவையாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சுற்று மாளிகை தூண்களோடு அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை விமானத்தின் கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. பாண்டியர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கருவறை விமானம் விளங்குகிறது. விமானம் எட்டுப்பட்டையுடன் கூடிய திராவிட பாணியில் அமைந்துள்ளது. மண்டபங்கள் விசயநகரர் காலத்தில் எடுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இம்மண்டபங்களில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் பலவற்றை நோக்கும் போது அவை பல விசயநகரக் கோயில் மண்டபங்களில் காணப்படுவது போன்றே உள்ளன.
|
|
சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | கி.பி.12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலப் பாண்டியர், விசயநகரர் காலத்தைச் சேர்ந்த இக்கோயில் மிகப்பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இக்கோயில் திருமாலுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். அழகிய பெரிய திருமதிலும், திருச்சுற்று மாளிகையும் கொண்டுள்ளது. ஆற்றினை ஒட்டி அழகிய தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இம்மண்டபம் இறைவனின் தீர்த்தவாரியின் போது தங்குமிடமாக இருக்கலாம். இக்கோயில் கருவறை விமானம் கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், மேற்பகுதி சுதையினாலும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்களைக் கொண்டதாக உள்ளது. தளங்களில் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. முக மண்டபத்திலும் மகாமண்டபத்திலும் உள்ள தூண்களில் பலவித புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் வைணவ சமயத்தைச் சார்ந்தவையாக இருப்பினும் ஒன்றிரண்டு சிவபெருமானைக் குறித்தவையாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சுற்று மாளிகை தூண்களோடு அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை விமானத்தின் கோட்டங்களில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. பாண்டியர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக கருவறை விமானம் விளங்குகிறது. விமானம் எட்டுப்பட்டையுடன் கூடிய திராவிட பாணியில் அமைந்துள்ளது. மண்டபங்கள் விசயநகரர் காலத்தில் எடுப்பிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இம்மண்டபங்களில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் பலவற்றை நோக்கும் போது அவை பல விசயநகரக் கோயில் மண்டபங்களில் காணப்படுவது போன்றே உள்ளன. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | அகத்தீஸ்வரர் கோயில், காசிபநாதர் கோயில், கிருஷ்ணசுவாமி கோயில், தென்னழகர் கோயில், நீலமணிநாதசுவாமி கோயில், அம்மைநாதர் கோயில் |
| செல்லும் வழி | திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்திலிருந்து சில கி.மீ. தொலைவில் சேரன்மகாதேவி அமைந்துள்ளது. அம்பாசமுத்திரத்திலிருந்து பேருந்தில் சேரன்மகாதேவி செல்லலாம். |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 7.00-09.30முதல் மாலை 5.30-7.30 வரை |
சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | அம்பாசமுத்திரம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | அம்பாசமுத்திரம், தென்காசி, திருநெல்வேலி |
| அருகிலுள்ள விமான நிலையம் | மதுரை |
| தங்கும் வசதி | அம்பாசமுத்திரம், தென்காசி, திருநெல்வேலி விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 May 2017 |
| பார்வைகள் | 51 |
| பிடித்தவை | 0 |