Back
வழிபாட்டுத் தலம்
சங்ககிரி ஜாமிஆ மசூதி
வழிபாட்டுத் தலத்தின் பெயர் சங்ககிரி ஜாமிஆ மசூதி
வேறு பெயர்கள் ஜாமிஆ பள்ளிவாசல்
ஊர் சங்ககிரி துர்க்கம்
வட்டம் சங்ககிரி
மாவட்டம் சேலம்
உட்பிரிவு 8
காலம் / ஆட்சியாளர் கி.பி.16-ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 500 ஆண்டுகள் பழமையானது. மிக உயர்ந்த மலைக்கோட்டையாகும்.
சுருக்கம்
இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் கோட்டைகளுல் சங்ககிரி கோட்டையும் ஒன்றாகும். இக்கோட்டை சேலம் ஈரோடு சாலையில் சேலத்திலிருந்து 38 கி.மீ தூரத்திலும் ஈரோட்டிலிருந்து 22 கி.மீ.தூரத்திலும் உள்ளது. விஜயநகர பேரரசரால் 15 நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். 12 கோட்டை மதில்களுடன் உள்ள இக்கோட்டையில் சில மதில்கள் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இரண்டு மசூதிகள், இரண்டு பெருமாள் கோயில்கள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. விசயநகர-நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு இக்கோட்டையில் இசுலாமியர்களின் புனிதத் தலமான ஜாமிஆ பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கிறது. இப்பள்ளிவாசல் மேற்கூரையின்றி மண்டபம் மட்டுமாய் காட்சியளிக்கிறது. ஜட்ஷாபீ என்னும் பெண்மணியின் உடல் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.
சங்ககிரி ஜாமிஆ மசூதி
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம்
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் வரதராஜப் பெருமாள் கோயில், சென்ன கேசவப் பெருமாள் கோயில், சங்ககிரி கெய்த் பீர் மசூதி
செல்லும் வழி சங்ககிரி மலைக் கோட்டை சேலம் மாவட்டத்தில் சங்ககிரி வட்டத்தில் ‘சங்கரி துர்க்கம்’ என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும். இது சேலத்திலிருந்து 35 கிமீ வடக்கில் அமைந்துள்ளது.
கோவில் திறக்கும் நேரம் காலை 5.00 முதல் பகல் 12.00 மணி வரை மாலை 5.00 முதல் இரவு 7.00 மணி வரை
சங்ககிரி ஜாமிஆ மசூதி
அருகிலுள்ள பேருந்து நிலையம் சங்ககிரி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் சங்ககிரி
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி சங்ககிரி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 42
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்