சிற்பம்
யானைத் திருமகள்
யானைத் திருமகள்
சிற்பத்தின் பெயர் | யானைத் திருமகள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தஞ்சை பெருவுடையார் கோயில் |
ஊர் | தஞ்சாவூர் |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வைணவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
விளக்கம்
யானைத் திருமகள்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பாற்கடல் கடைந்த பொழுது தோன்றியவள் திருமகள். திருமாலின் திருமார்பினைச் சேர்ந்த திருமறு ஆவாள். இத்திருமகளின் இருபுறமும் கஜங்கள் கும்ப நீரை ஊற்றுவதாக காட்டப்படுவது கஜ லெட்சுமி என்னும் திரு வடிவம் ஆகும். யானைத் திருமகளாகிய கஜலெட்சுமி தாமரைப் பீடத்தின் மீது அர்த்த பத்மாசனத்தில் இரு கால்களையும் மடக்கி அமர்ந்துள்ளாள். இரு கைகளிலும் தாமரை மலரைப் பிடித்துள்ளாள். தேவியின் தலைக்கு மேல் கொற்றக் குடை காட்டப்பட்டுள்ளது. குடையின் இருபுறமும் சூரிய சந்திர்கள் பறந்தபடி ஒரு கையில் மலரைப் பிடித்தபடியும், மற்றொரு கையால் போற்றி முத்திரை காட்டியபடியும் உள்ளனர். தேவியின் பின்னால் இருபுறமும் சாமரப் பெண்கள் ஒரு கையில் சாமரத்துடனும், மற்றொரு கையை தொடையில் ஊரு முத்திரையாகவும் கொண்டு நின்றுள்ளனர். திருமகள் பத்ர பூரிம முகப்புடன் கூடிய கரண்ட மகுடம் தரித்துள்ளார். நெற்றியில் கண்ணி மாலை விளங்குகின்றது. காதுகளில் தாடங்கம் என்னும் தோடு அணிந்துள்ளார். கழுத்தில் கண்டிகை, சரப்பளி, மார்பில் சன்னவீரம், கொங்கைகளை மறைத்தவாறு குஜபந்தம் ஆகிய அமைந்துள்ளன. தோள்களில் தோள்மாலை உள்ளது. இடையில் நீண்ட மடிப்புகளுடன் கூடிய பட்டாடையும், கால்களில் பாத கடகமும், பாதங்களில சதங்கையும் அணிந்துள்ளார். தேவியின் பின்னால் நின்றுள்ள சாமரப் பெண்களின் அளகசூடகம் என்னும் தலைக்கோலத்துடன் முடிச்சுருள்கள் மையத்தில் தொய்யகத்துடன் காட்டப்பட்டுள்ளன. கழுத்தணிகளும், சன்னவீரமும் திருமகளைப் போன்றே அமைக்கப்பட்டிருந்தாலும் மார்பில குஜபந்தம் காட்டப்படவில்லை. அரைப்பட்டிகை, தாரகைச் சும்மை ஆகியன இடையில் அழகுற கொசுவம் முன்புறம் தொங்க, கணுக்கால் வரையிலான பட்டாடை அணிந்துள்ளனர்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
யானைத் திருமகள்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |