சிற்பம்

சங்கர நாராயணன்

சங்கர நாராயணன்
சிற்பத்தின் பெயர் சங்கர நாராயணன்
சிற்பத்தின்அமைவிடம் தஞ்சை பெருவுடையார் கோயில்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
விளக்கம்
சைவமும் வைணமும் ஒன்றிணைந்த திருக்கோலம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான்  கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. பிற்காலங்களில் ஹரியும் சிவனும் இணைந்த உருவம் சிற்பங்களில் காட்டப்படுகிறது. சிவ வடிவங்களில் ஒன்றாக சங்கர நாராயணன் உருவம் கருதப்படுகிறது. மாலொருபாகன் சைவ - வைணவ நெறிகளுக்கிடையிலான ஒற்றுமைக்கு சான்றாகின்றது. சிவனின் இவ்வடிவம் "சங்கர நாராயணன்" , "கேசவார்த்த மூர்த்தம்" "அரியர்த்த மூர்த்தம்" என்றெல்லாம் அழைப்பதுண்டு.வலது பாதி சிவனாகவும், இடது பாதி திருமாலாகவும் காட்டப்பட்டுள்ளனர். வலப்புறம் சிவனின் அம்சங்களும் இடப்புறம் திருமாலின் அம்சங்களும் இத்திருமேனியில் காணப்படும். வலப்புறம் வெண்ணிறம், வெண்ணிலா, வெண்ணீறு, உருத்திராக்கம், அஞ்சேல், மான் ஏந்திய கரங்கள் என்பன அலங்கரிக்க, இடப்புறம் கார்வண்ணம், மஞ்சளாடை, நகைகள், சங்கமும் கதையும் தாங்கிய திருக்கரங்கள் எனக் காணப்படும். வலது பாதியில் சிவனுக்குரிய சடை மகுடம், கையில் மழு, இடையில் அரையாடை (தோலாடை) ஆகியனவும், இடது பாதியில கிரீட மகுடம், காதில் மகர குண்டலம், நீண்ட பட்டாடை, கையில் சங்கு ஆகியனவும் இடம் பெற்றுள்ளன. பீடத்தின் மீது சமபாதத்தில் சங்கர நாராயணர் நின்றுள்ளார். தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது. சிவனின் வலது முன் கை அபய (காக்கும்) முத்திரை காட்டுகிறது. திருமாலின் இடது முன் கை தொடையில் ஊரு முத்திரையாக அமைந்துள்ளது. இருபுறமும் இடைக்கட்டின் முடிச்சுகள் நீண்டு கணுக்கால் வரை தொங்குகின்றன. அணிகலன்கள் உடலின் இரு பாதியிலும் அவரவர்க்குரியதாக காட்டப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
சங்கர நாராயணன்
சிற்பம்

சங்கர நாராயணன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்