சிற்பம்

கம்ப பஞ்சரம்

கம்ப பஞ்சரம்
சிற்பத்தின் பெயர் கம்ப பஞ்சரம்
சிற்பத்தின்அமைவிடம் தஞ்சை பெருவுடையார் கோயில்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை பிற வகை
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
விளக்கம்
பஞ்சரப் பத்தியில் இடம் பெறும் தூண் போன்ற சிற்ப அமைப்பு
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கும்பப் பஞ்சரம் என்பது கோட்டங்களுக்கு இடையிலான பஞ்சரப் பத்தியில் அமைக்கப்படும் ஒரு சிற்ப உறுப்பாகும். அடியில் குடம் போன்றதும், மேலே கொடிச்சிற்ப வேலைப்பாடுகள் அமைந்ததுமாய் விளங்கும் கும்பப் பஞ்சரம் வளத்திற்கான குறியீடாய் கோயில்களில் காட்டப்படுகிறது. அடிப்பகுதியில் கும்பமின்றி அமைக்கப்பட்டிருந்தால் அது கம்ப பஞ்சரம் எனப்படும். கம்பம் என்றால் தூண் என பொருள் படும். தூண் வழிபாடே வளத்திற்கான வழிபாடாக பண்டு மக்கள் கொண்டிருந்ததை கோயில்களில் இறையுருவங்களை வைத்த பின்னும் சிற்பங்களாக அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மகர தோரணத்தைப் போன்றே கம்ப பஞ்சரத்தின் மேற் பகுதியிலும் வீரர்கள், கலை மகளிர், விலங்குகள், பறவைகள், கொடிக்கருக்குகள் ஆகியவை இடம் பெறும்.
குறிப்புதவிகள்
கம்ப பஞ்சரம்
சிற்பம்

கம்ப பஞ்சரம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்