சிற்பம்
ஆலிங்கனமூர்த்தி
ஆலிங்கனமூர்த்தி
சிற்பத்தின் பெயர் | ஆலிங்கனமூர்த்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தஞ்சை பெருவுடையார் கோயில் |
ஊர் | தஞ்சாவூர் |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
விளக்கம்
உமையன்னையின் இடையை இடது கையால் அணைத்தபடியுள்ள சிவ வடிவம் ஆலிங்கன பெருமான்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இறைவன் இறைவியின் இடையில் கை வைத்து அணைத்தபடி நிற்கிறார். சிவனார் வலது காலை முன் வைத்து, இடது காலை ஊன்றி ஸ்தானக நிலையில் நிற்கிறார். அன்னை சமபாதத்தில் தன் தலைவனுக்கு நெருக்கமாக நிற்கிறாள். சிவனுக்கு ஜடாமகுடமும், அன்னைக்கு கரண்ட மகுடமும் அழகு செய்கின்றன. காதுகளில் பத்ர, வியாழக்குண்டலங்கள் அணிந்திருக்கும் இறைவன் அணைத்திருக்கும் தேவி மகர குண்டலங்கள் அணிந்துள்ளாள். கழுத்தில் முத்தாலான அல்லது மணிகளால் ஆன ஆபரணத்தை இருவரும் அணிந்துள்ளனர். தேவன் மார்பில் பட்டையான முப்புரிநூலும், ஸ்தனசூத்திரமும், தேவி மார்பில் சன்னவீரமும் அணிந்துள்ளனர். ஆலிங்கனார் வயிற்றில் உதரபந்தம் அணி அமைந்துள்ளது. இருவருக்கும் கைகளில் தோள்வளை, முன் வளைகள் அமைந்துள்ளன. அவை வெவ்வேறு கலைப்பாணியில் காட்டப்பட்டுள்ளன. பின் வலது கையில் மழுவை ஏந்தியுள்ளார். முன் வலது கையில் தன் தலைவி அன்புடன் கொடுத்த மலரைப் பிடித்துள்ளார் போலும். முன் இடது கை தேவியின் இடையை அணைத்துள்ளது. பின் இடது கையில் மானைப் பிடித்துள்ளார். தேவி தன் வலது கையை மடக்கி வலது தோளை தொட்டவாறும் இடது கையை தொடையில் வைத்த ஊரு முத்திரை காட்டியவாறும் உள்ளார். ஈசனாருக்கு அரையாடையும், அம்மைக்கு கணுக்கால் வரை நீண்ட ஆடையும் அமைந்துள்ளன. இருவருக்கும் அரைப்பட்டிகை, தாரகைச்சும்மை, கடி பந்தம் (இடைக்கட்டு) ஆகியனவும் அழகுற அமைந்து ஈசனாருக்கு அரையாடையும், அம்மைக்கு கணுக்கால் வரை நீண்ட ஆடையும் வடிக்கப்பட்டுள்ளன. உமாமகேசுவரர் நிற்கும் கோலம் இல்லறமல்லது நல்லறமன்று என்னும் மொழியினை மெய்ப்பிக்கின்றது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
ஆலிங்கனமூர்த்தி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |