சிற்பம்

சூரியன்

சூரியன்
சிற்பத்தின் பெயர் சூரியன்
சிற்பத்தின்அமைவிடம் தஞ்சை பெருவுடையார் கோயில்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சௌமாரம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
விளக்கம்
ஒளிக் கடவுளாய் உயிர்கள் போற்றும் இளம்பரிதி சூரியன்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சூரிய பகவான் பரிதி, பாற்கரன், ஆதித்தன், பனிப்பகை, சுடர், பதங்கள், இருள்வலி, சவிதா, சூரன், ஏல், மார்த்தாண்டன், என்றூழ், அருணன், ஆதவன், மித்திரன், ஆயிரஞ்சோதியுள்ளோன், தரணி, செங்கதிரோன், சண்டன், தபனன், ஒளி, சான்றோன், அனலி, அரி, பானு, அலரி, அண்டயோனி, கனலி, விகர்த்தனன், கதிரவன், பகலோன், வெய்யோன், தினகரன், பகல், சோதி, திவாகரன், அரியமா, இனன், உதயன், ஞாயிறு, எல்லை, கிரணமாலி, ஏழ்பரியோன், வேந்தன், விரிச்சியன், விரோசனன், இரவி, விண்மணி, அருக்கன் ஆகிய பெயர்களைப் பெற்றுத் திகழ்கிறார். இளையராய்த் திகழும் வெய்யக் கடவுள் சமபாதத்தில் நின்றுள்ளார். இரு கைகளிலும் தாமரை மலரைப் பிடித்திருக்க வேண்டும் கைகள் சிதைந்துள்ளன. தலையின் பின்னால் ஒளி வட்டம் திகழ்கிறது. பூரிம முகப்புடன் கூடிய கரண்ட மகுடம் அணிந்து, நீள் காதுகளில் மகர குண்டலங்கள் திகழ, மார்பில் முத்துக் கண்டிகை, சரப்பளி, முத்துச் சவடி விளங்க, வயிற்றில் உதரபந்தம், மார்பில் முத்தாலான முப்புரிநூல், கைகளில் தோள் வளைகள், முன்வளைகள், இடையில் முகப்புடன் அமைந்த அரைப்பட்டிகையுடன் கூடிய தொடை வரையிலான அரையாடை ஆகியன அணிந்துள்ளார். இடைக்கட்டு ஆடையின் முடிச்சு இருபுறமும் காட்டப்பட்டு நீண்டு தொங்குகின்றது. ஒளிக்கடவுளின் இச்சிற்பம் பண்டு வண்ணம் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்புதவிகள்
சூரியன்
சிற்பம்

சூரியன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்