Back
சிற்பம்

யானைத் திருமகள் (கஜலெட்சுமி)

யானைத் திருமகள் (கஜலெட்சுமி)
சிற்பத்தின் பெயர் யானைத் திருமகள் (கஜலெட்சுமி)
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
கஜலெட்சுமி எனப்படும் யானைத்திருமகள் உருவமைதியானது தாமரை மலரின் மீது தேவி அமர்ந்த நிலையைக் குறிப்பதாகும். திருமகள் நான்கு திருக்கைகளில் பின்னிரு கைகளில் தாமரை மலர்களை பிடித்தபடியும், முன்னிரு கைகளில் அளிக்கும் மற்றும் காக்கும் முத்திரைகளை காட்டியபடியும் அமர்ந்துள்ள நிலையே யானைத் திருமகள் வடிவாகும். தேவியின் இருபுறமும் யானை கும்பத்திலுள்ள நீரால் தேவிக்கு நன்னீராட்டுகிறது. இச்சிற்பம் நன்மங்கலமாக கருதப்பட்டு நுழைவாயில்களிலும், முகப்புகளிலும், கல், உலோகம், மரம் போன்றவற்றால் அமைக்கப்படுவது மரபாகும்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
கோயில்கள், மண்டபங்கள் மற்றும் மக்கள் கூடுமிடங்களான சத்திரம், மன்றம் ஆகியவற்றின் நுழைவாயிலில் மங்கலத்திற்காகவும், வளமைக்காகவும் யானைத்திருமகளின் உருவத்தினை புடைப்புச்சிற்பமாக அமைப்பது மரபு. ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள பொன்காளியம்மன் கோயிலில் இச்சிற்பம் கிடைத்தது. இச்சிற்பத்தின் காலம் அதன் உருவமைதியைக் கொண்டு கி.பி.18-ஆம் நூற்றாண்டு எனலாம்.
குறிப்புதவிகள்
யானைத் திருமகள் (கஜலெட்சுமி)
சிற்பம்

யானைத் திருமகள் (கஜலெட்சுமி)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்