சிற்பம்

பைரவர்

பைரவர்
சிற்பத்தின் பெயர் பைரவர்
சிற்பத்தின்அமைவிடம் தஞ்சை பெருவுடையார் கோயில்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
விளக்கம்
சிவ வடிவங்களுள் ஒன்றான பைரவர் கோலம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
64 சிவ வடிவங்களுள் ஒன்றான பைரவ மூர்த்தியை  பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர்சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலிவாதுகன், வயிரவன் என்று பல பெயர்களில் வணங்குகிறார்கள். பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர். அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. பெரிய கோயிலில் சமபாதத்தில் நேராக நிற்கும் பைரவர் தொடை வரையிலான அரையாடை கொண்டுள்ளார். இரண்டு கைகள் பெற்றுள்ளார். வலதில் முத்தலைச் சூலமும், இடதில் கபாலமும் கொண்டுள்ளார். கழுத்து, மார்பு, வயிறு, இடை, கை ஆகியவற்றில் நாகத்தினையே அணிகலன்களாக் கொண்டுள்ளார். தொடையணி குறங்குசெறியாக அமைந்துள்ளது. இடைக்கட்டின் கடிபந்தம் முன்னால் வளைந்து தொங்குகிறது. இடைக்கட்டின் முடிச்சு வலதுபுறம் அமைந்துள்ளது. வெருட்டும் விழிகளையுடைய பைரவர் மீசையுடன் காணப்படுகிறார்.
குறிப்புதவிகள்
பைரவர்
சிற்பம்

பைரவர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்