சிற்பம்

மகரதோரணம்

மகரதோரணம்
சிற்பத்தின் பெயர் மகரதோரணம்
சிற்பத்தின்அமைவிடம் தஞ்சை பெருவுடையார் கோயில்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை பிற வகை
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
விளக்கம்
கோட்டத்தின் மேல் அலங்கார வளைவாக அமைக்கப்படும் மகர தோரணம்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
வளமையின் குறியீடாக விளங்கும் மகரத்தின் வாயிலிருந்து வெளிப்படும் கொடிப்பாளைகள், கொடிக்கருக்குள், விலங்குகள், மனிதர்கள், அணிகள், கணங்கள், வீரர்கள் ஆகியனவற்றை அலங்கார வளைவாக தோரண அமைப்பில் கோட்டங்களின் மேல் புடைப்புச் சிற்பமாக அமைப்பது மகர தோரணமாகும். மகர தோரணத்தின் நடுவில் அமையும் வட்ட வடிவ மையத்தில் இறையுருவங்கள் வடிக்கப்படும். பெரிய கோயிலில் அமைந்துள்ள மகர தோரணத்தில் நடுவில் அமைந்த புடைப்புச் சிற்பமாக நல்லிருக்கை நாதர் (சுகாசன மூர்த்தி) காட்டப்பட்டுள்ளார். பீடத்தின் மீது இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்டு சுகாசனத்தில் சிவபெருமான் அமர்ந்துள்ளார். பின்னிரு கைகளில மழுவையும், மானையும் பற்றியுள்ளார். வலது முன் கை அபய முத்திரை காட்டுகிறது. இடது முன் கை தொடையில் வைக்கப்பட்டுள்ளது. ஜடாமகுடமும் இன்னும் பிறவணிகளும் கொண்ட நல்லிருக்கை நாதரின் இருபுறமும் உயர்ந்த விளக்குகள் காட்டப்பட்டுள்ளன. தலையின் இருபுறமும் சாமரம் வைக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
மகரதோரணம்
சிற்பம்

மகரதோரணம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 17
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்