சிற்பம்

இலிங்கோத்பவர்

இலிங்கோத்பவர்
சிற்பத்தின் பெயர் இலிங்கோத்பவர்
சிற்பத்தின்அமைவிடம் தஞ்சை பெருவுடையார் கோயில்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
விளக்கம்
இலிங்கத்திலிருந்து வெளிப்பட்டு தன் அடியினை திருமாலுக்கு காட்டி நிற்கும் இலிங்க புராணத் தேவர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
இலிங்கத்தின் பிளவிலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு சமபாதத்தில் நான்கு திருக்கரங்களுடன் தன்னருகே பணிந்து வணங்கும் திருமாலுக்கு அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கைகளில் வலது முன் கை அருட் கையாக அபய முத்திரைக் காட்டியும், இடது முன் கை தொடையில் வைத்த ஊரு முத்திரையாகவும் அமைந்துள்ளன. பின்னிரு கைகளில் மழுவையும், மானையும் பிடித்துள்ளார். தலையலங்காரமாக ஜடாமகுடம், நெற்றியில் முத்துத் தாமங்களுடனான நெற்றிப்பட்டம், காதுகளில் பத்ரகுண்டலம், மகர குண்டலம், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, உருத்திராக்க மாலை, கைகளில் தோள்வளை, முன்வளைகள், இடையில் அரைப்பட்டிகை, தாரகைச்சும்மை, தொடை வரை தொங்கும் குறங்குச் செறி, நீண்ட இடைக்கட்டு முடிச்சுகளுடன் கூடிய அரையாடை, பாதங்களில் அரியகம் ஆகியன ஆடையணிகளாகக் கொண்டுள்ளார். இலிங்க புராணத் தேவரின் காலருகே கருடாசனத்தில் அமர்ந்தபடி முன்னிரு கைகள் கூப்பி வணங்கிய படி விஷ்ணு காட்டப்பட்டுள்ளார். பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் கொண்டுள்ளார். மேலும் திருமாலுக்குரிய ஆடையணிக் கொண்டு பரமன் பாதம் பணிபவராய் உள்ளார். இச்சிற்பம் அடி தேடிய திருமாலுக்கு இலிங்கோத்பவர் தன்னடி காட்டி அருள்பாலித்ததை விளக்குவதாய் அமைந்துள்ளது.
குறிப்புதவிகள்
இலிங்கோத்பவர்
சிற்பம்

இலிங்கோத்பவர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்