சிற்பம்
மகிஷாசுரமர்த்தினி
மகிஷாசுரமர்த்தினி
சிற்பத்தின் பெயர் | மகிஷாசுரமர்த்தினி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தஞ்சை பெருவுடையார் கோயில் |
ஊர் | தஞ்சாவூர் |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சாக்தம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
விளக்கம்
எருமைத் தலையனை வென்று அவன் தலை மேல் தன் வீரக்கழல்கள் மிளிர நின்றிருக்கும் அன்னை மகிஷாசுரமர்த்தினி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
எருமைத்தலை அரக்கனை வென்ற பிறகு அன்னை கொற்றமங்கையாக சமபாதத்தில் எருமைத்தலையின் மேல் நிற்கும் காட்சி. தலைக்கு மேல் கொற்றக் குடையும், தலைக்குப் பின்னால் திருவாச்சி போன்ற நீள்வட்ட எரி சுடர் அமைப்பும் காட்டப்பட்டுள்ளன. மேலே இருபுறமும் சூரிய சந்திர்கள் பறந்தபடி ஒரு கையில் மலரைப் பிடித்தபடியும், மற்றொரு கையால் போற்றி முத்திரை காட்டியபடியும் உள்ளனர். நான்கு திருக்கைகளுள், மேலிரு கைகளில் சங்கு, சக்கரமும், வலது முன் கை அபய முத்திரையும், இடது முன் கை ஏந்தல் முத்திரையும் கொண்டுள்ளார். பத்ரபூரிமத்துடன் கூடிய கரண்ட மகுடம் தலையணியாகக் கொண்டு, நெற்றியில் நெற்றிப்பட்டையும், கண்ணி மாலையும் சூடியுள்ளார். காதுகளில் செவிப்பூக்கள் மற்றும் தொள்ளைக் காதுகளில் குண்டலங்களும் விளங்குகின்றன. தோள்களில் வாகுமாலை அணி செய்கின்றது. கழுத்தில் கண்டிகை, சரப்பளி, அரும்புச்சரம் விளங்க, கொங்கைகளை மறைத்தவாறு குஜபந்தம் காட்டப்பட்டுள்ளது. மார்பில் சன்னவீரம் குறுக்காக செல்கிறது. கைகளில தோள்மாலை, தோள்வளை, முன்வளைகள் அணிந்துள்ள தேவியின் விரல்களில் நடுவிரல் தவிர பிற விரல்களில் விரலணி வளையங்களாக உள்ளன. சிம்மயாளி முகப்புடன் கூடிய அரைப்பட்டிகை மற்றும் தாரகைச் சும்மை இடையில் விளங்க இடைக்கட்டாகிய கடி சூத்திரம் இரு தொடையின் மேல் வளைந்துள்ளது. தொடையில் அணியாக குறங்கு செறி விளங்குகின்றது. தொடையில் அரையாடை அணிந்துள்ள கொற்ற தேவி கால்களில் ஐந்து எண்ணிக்கையுள்ள பாடகம் பூண்டுள்ளார். தேவியின் இருபுறமும் இரண்டு பணிப் பெண்கள் நின்றுள்ளனர். இவர்கள் கையில் பிடித்த தண்டாயுதத்தை தோளில் சாத்தியுள்ளனர். மற்றொரு கையை தொடையில் ஊரு முத்திரையாக வைத்துள்ளனர். இருவரும் முழு நீள ஆடை, மார்பில் சன்னவீரம், கழுத்தணி காதணி, கையணி இவைகளை தம் தலைவியைப் போலவே கொண்டுள்ளனர். இருவருக்கும் தலைக்கோலம் குந்தளமாக அமைந்துள்ளது. இருபுறமும் உள்ள பகுப்புக் கோட்டங்களில் முனிவர்களும், அரசன் அரசியாரும், குருமார்களும் வணங்கிய நிலையிலும், போற்றிய நிலையிலும், பணிந்த நிலையிலும் காட்டப்பட்டுள்ளனர்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
மகிஷாசுரமர்த்தினி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |