Back
சிற்பம்

யானைத்திருமகள் (கஜலெட்சுமி)

யானைத்திருமகள் (கஜலெட்சுமி)
சிற்பத்தின் பெயர் யானைத்திருமகள் (கஜலெட்சுமி)
சிற்பத்தின்அமைவிடம் மாமல்லபுரம்
ஊர் மாமல்லபுரம்
வட்டம் திருக்கழுக்குன்றம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர்
விளக்கம்
வேழத்திருவாய் செய்யோளாகிய திருமகள் அமர்ந்திருக்கும் காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
யானைத் திருமகள் தாமரை மலரின் மீது அமர்ந்துள்ளாள். இரு கைகளிலும் மலரைப் பிடித்தபடியான கடக முத்திரையைக் கொண்டுள்ளாள். தலையில் கரண்ட மகுடமும், நெற்றியில் கண்ணிமாலையும் தரித்து, காதுகளில் பத்ர குண்டலங்கள் அணி செய்ய, கழுத்தில் அணிகள் விளங்க, மார்பில் சன்னவீரம், கைகளில் தோள்வளைகள், முன்வளைகள், கால்களில் பாத கடகங்களும், பாதங்களில் சதங்கைகளும் அணி செய்ய அமர்ந்துள்ளாள். மேலே இரு வேழங்கள் காட்டப்பட்டுள்ளன. வலதுபுறம் உள்ள வேழம் தன் துதிக்கையில் உள்ள கும்பத்தை தலைகீழாக சாய்த்து அதில் உள்ள புனித நீரை தேவியின் தலையில் ஊற்றுகிறது. மற்றொரு பக்கம் உள்ள பிடியோ, தேவியின் இருபுறமும் இருவராக நிற்கும் சேடியர் ஒருவரின் கையில் உள்ள கலசத்தை தன் துதிக்கையால் தேவியின் திருமுழுக்கிற்காக எடுக்கிறது. திருமகளின் இருபுறமும் நிற்கும் பெண்களில் முன் நிற்பவர்களின் கைகளில் கலசம் உள்ளது. இப்பெண்கள் பல்லவப் பெண்களின் உருவமைதியைப் பெற்றுள்ளனர் போலும் தெரிகிறது. இப்பெண்டிர் நால்வரும் வெவ்வேறான தலைக்கோலத்தைக் கொண்டிருந்த போதிலும் கொடியிடையுடனும், மெல்லிய உடல் வாகுடனும் ஒத்த அங்க அமைதிகளைப் பெற்றவர்களாக காணப்படுகின்றனர்.
குறிப்புதவிகள்
யானைத்திருமகள் (கஜலெட்சுமி)
சிற்பம்

யானைத்திருமகள் (கஜலெட்சுமி)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்