சிற்பம்
யானைத் திருமகள்
சிற்பத்தின் பெயர் யானைத் திருமகள்
சிற்பத்தின்அமைவிடம் சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம்-மரச்சிற்பங்கள்
ஊர் ஆறகழூர்
வட்டம் ஓமலூர்
மாவட்டம் சேலம்
அமைவிடத்தின் பெயர் சேலம் அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை தேர்ச்சிற்பங்கள்
ஆக்கப்பொருள் மரம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.19-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

          பத்மாசனத்தில் அமர்ந்துள்ள யானைத் திருமகள் இரு கைகளிலும் தாமரை மலர்களை பிடித்துள்ளாள். இருபுறமும் யானைகள் குடநீரினைக் கொண்டு தேவியை நீராட்டுகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

          சேலம் அரசு அருங்காட்சியத்தில் காட்சி வைக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களுள் ஒன்றான அம்மனின் உருவம் இது. தேர்ச்சிற்பமாக அமைந்திருந்த இந்த பலகைச் சிற்பம் ஆறகழூர் என்னும் ஊரில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான தேரில் இருந்த சிற்பப் பலகையாகும். தேர் காலவோட்டத்தில் சிதைவுற்ற போது அதிலிருந்த மரப்பலகைச் சிற்பங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அதன் கலைத்தன்மையை காக்கும் பொருட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் உள்ள பெண் தெய்வம் கஜலெட்சுமி என்று அழைக்கப்படுகின்ற யானைத் திருமகள் ஆவாள். வளமைகளை நல்கும் தேவியாக வழிபடப்படும் இலக்குமியின் இவ்வடிவம் யோக லட்சுமி என இங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஆவண இருப்பிடம் சேலம் அரசு அருங்காட்சியகம்
யானைத் திருமகள்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 17 Sep 2018
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்