சிற்பம்
சிவ-பார்வதி திருமணக்காட்சி
சிவ-பார்வதி திருமணக்காட்சி
சிற்பத்தின் பெயர் | சிவ-பார்வதி திருமணக்காட்சி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தஞ்சை பெருவுடையார் கோயில் |
ஊர் | தஞ்சாவூர் |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
விளக்கம்
சிவன், பார்வதி திருமணக்காட்சி புடைப்புச் சிற்பம்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கைலாய மலையில் நடைபெற்ற சிவ-பார்வதி திருமணக்காட்சி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. நான்முகன் அந்தணராய், தீ வளர்த்து திருமணத்தை நடத்துகிறார். அவருக்குப் பின்னால் விஷ்ணு நிற்கிறார். விஷ்ணுவின் பின்னால் தேவர்கள் இருவர் நின்று இத்திருமணக் காட்சியைக் காண்கின்றனர். அவர்களில் ஒருவர் நந்தி ஆவார். சிவபெருமான் பார்வதி தேவியின் வலது கையை தன் வலது கையால் பிடித்துள்ளார். பார்வதி நாணமுற்று தலையைக் குனிந்துள்ளார். ஈசனுக்குப் பின்னால் நிற்பவர்கள் கலைமகளும், திருமகளும் ஆகலாம். கைலையில் நடைபெறும் சிவபார்வதி திருமணத்தைக் காண பலரும் கூடியுள்ளது போல் தெரிகிறது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சிவ-பார்வதி திருமணக்காட்சி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |