சிற்பம்
அர்த்தநாரீஸ்வரர்
அர்த்தநாரீஸ்வரர்
சிற்பத்தின் பெயர் | அர்த்தநாரீஸ்வரர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தஞ்சை பெருவுடையார் கோயில் |
ஊர் | தஞ்சாவூர் |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
விளக்கம்
அம்மையப்பராய் விளங்கும் மாதொரு பாகர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அர்த்தநாரீசுவரர் நந்தியின் மீது ஒயிலாக சாய்ந்தபடி உள்ளார். இடது காலை ஊன்றி, வலது காலை தளர்வாக வைத்த வைஷ்ணவ நிலையில் நிற்கிறார். உமையொரு பாகன் சிற்பத்தில் வலது பாதி சிவனாகவும், இடது பாகம் உமையாகவும் அமைந்துள்ளது. தலையில் வலதுபுறம் ஜடாமகுடமாகவும், இடது பகுதியில் கரண்ட மகுடமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. நெற்றிப்பட்டை சிவனுக்கு மணிகள் பதித்த தொய்யலாகவும், உமைக்கு தங்கத்தாலான பட்டையாகவும் காணப்படுகின்றன. நெற்றியில் வலது பக்கத்தில் முக்கண் உள்ளது. நீள்காதுகளில் அம்மை குதம்பையும், பெருமகனார் நாககுண்டலமும் அணிந்துள்ளனர். கழுத்தில் சிவ பாதியில் கண்டிகையும், சரப்பளியும், அரும்புச்சரமும், பெண் பாதியில் மணிமாலை, முத்துச்சரமும் அணியப்பட்டுள்ளன. மார்பில் முப்புரி நூல் வலதில் பட்டையாகவும், இடது புறம் செல்லும் போது நூலாகவும் பிரிந்து செல்கிறது. மாதொரு பாகரின் தோளில் உள்ள வாகுமாலை மாதுக்கும் காட்டப்பட்டுள்ளது. தேவிக்கு இடது கையும், பெருமானுக்கு வலது இரு கைகளும் காட்டப்பட்டுள்ளன. தேவி தன் இடது கரத்தில் மலர் ஒன்றை பிடித்துள்ளார். கைகளில் மகர பூரிமம் அமைந்த தோள்வளையும், நான்கு முன்வளைகளும் அணிந்துள்ளார். அம்மையப்பருக்கு பின்புறமாக நிற்கும் நந்தியின் முதுகில் உள்ள திமிலின் மீது இறையனார் தன் வலது முன் கையை ஊன்றியுள்ளார். வலது பின் கை முத்தலை சூலத்தை ஏந்தியுள்ளது. மாதொரு பாகரின் தோள் வளை நாகாபரணமாக உள்ளது. தேவி கையில் செம்பொற்வளை அணிந்துள்ளாள்.இருவருக்கும் விரல்களில் வளையங்கள் உள்ளன. இடையில் அரைப்பட்டிகை முகப்புடன் கூடியதாக உள்ளது. மேகலை அம்மையப்பரின் தொடையில் தொங்கும் குறங்குசெறி என்னும் அணி இரு வெவ்வேறான வடிவமைப்பில் அணியப்பட்டுள்ளன. சிவனார் அரையாடையும், உமையாள் மடிப்புகளுடன் நீண்ட பட்டாடையும் அணிந்துள்ளனர். தேவியின் ஆடையின் கொசுவம் இடது தொடையில் தொங்குகிறது. இரு பாதியிலும் இடைக்கட்டு ஆடையின் முடிச்சு இருபுறமும் காட்டப்பட்டுள்ளன. இறையனாரின் கால்களில் கிண்கிணியும், வீரக்கழலும் உள்ளன. தேவிக்கு அடுக்குகளில் அமைந்த கழல்வளைகள் காட்டப்படுள்ளன.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
அர்த்தநாரீஸ்வரர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |