சிற்பம்
உமா மகேஸ்வரர்
| சிற்பத்தின் பெயர் | உமா மகேஸ்வரர் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | தஞ்சை பெருவுடையார் கோயில் |
| ஊர் | தஞ்சாவூர் |
| வட்டம் | தஞ்சாவூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | சுவர்ப்பகுதி - புடைப்புச் சிற்பம் |
| சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
| ஆக்கப்பொருள் | கருங்கல் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
|
விளக்கம்
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சுவர்ப்பகுதிகளில் இப்புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் சிவவடிவங்களும், சிவபுராணக் காட்சிகளும் பெரும்பாலும் சிற்பங்களாய் அமைந்துள்ளன. அவற்றுள் கங்காவிசர்சன மூர்த்தி, கிராதார்ச்சுனர் , சுகாசனமூர்த்தி ஆகிய சிற்பங்களின் உருவமைதிகள் மிகவும் எழிலார்ந்தவையாக காட்சியளிக்கின்றன.
|
|
| ஒளிப்படம்எடுத்தவர் | திரு.வேலுதரன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
தாங்குதளத்தின் மீது அமைந்துள்ள தாமரைப்பீடத்தின் மீது திருமால் சமபாதத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது. திருவாச்சி போன்ற எரிசுடர் நீள்வட்டம் தலைக்குப் பின் அமைந்துள்ளது. மேலே இரு கந்தர்வர்கள் பறந்த நிலையில் வாழ்த்தொலிக்கின்றனர். விஷ்ணு கிரீட மகுடராய், முத்துத்தாமங்களுடன் கூடிய நெற்றிப்பட்டை அணிந்து , நீள் செவிகளில் மகர குண்டலங்கள் திகழ, கழுத்தில் கண்டிகை, சரப்பளி, மணியாரம் அணி செய்ய நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். பின்னிரு கரங்களில் சங்கு சக்கரத்தைப் பிடித்துள்ளார். வலது முன் கை அபய முத்திரையும், இடது முன் கை ஏந்தல் கையாகவும் அமைந்துள்ளன. மார்பில் முப்புரி நூலும், ஸ்தன சூத்திரமும் செல்கின்றன. கைகளில் முன்வளைகள் தெரிகின்றன. விரல்களில் நடுவிரல் தவிர ஏனைய விரல்களில் வளையங்கள் அணியப்பட்டுள்ளன. இடையில் அரைப்பட்டிகை முகப்புடன் கூடியதாக அமைந்து, கணுக்கால் வரையிலான நீண்ட பட்டாடை மடிப்புகளுடன் அணிந்துள்ளார். ஆடையின் முடிச்சு இடையின் பின்புறம் காட்டப்பட்டு நீண்டு தொங்குகின்றன. தொடையில் குறிங்குச் செறி அணி அழகு செய்கின்றது. திருமாலின் அருகில் இருபுறமும் நிற்கும் தேவியர் இருவரும் வைஷ்ணவ நிலையில் நின்றுள்ளனர். கண்ணிமாலை நெற்றிப்பட்டையாக் கொண்டு, கரண்ட மகுடராய் காட்சியளிக்கின்றனர். அன்னையர் இருவருக்கும் மார்பில் குஜபந்தங்கள் காட்டப்பட்டுள்ளன. பொதுவாக நிலமகளுக்கு குஜபந்தம் காட்டப்படுவதில்லை. ஆனால் இங்கு இடம் பெற்றுள்ளது சிறப்பு. இடையில் அரைப்பட்டிகை முகப்புடன் கூடியதாக அமைந்து, கணுக்கால் வரையிலான நீண்ட பட்டாடை மடிப்புகளுடன் அணிந்துள்ளனர். அன்னையர் தாம் நிற்கும் பக்கத்திற்கேற்ப ஒரு கையை தொடையில் வைத்தவாறு ஊரு முத்திரையாகவும், மற்றொரு கையில் மலரைப் பிடித்தபடியும் நிற்கின்றனர்.
|
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
| பார்வைகள் | 28 |
| பிடித்தவை | 0 |