Back
சிற்பம்

காலாந்தக மூர்த்தி (காலாரி)

காலாந்தக மூர்த்தி (காலாரி)
சிற்பத்தின் பெயர் காலாந்தக மூர்த்தி (காலாரி)
சிற்பத்தின்அமைவிடம் தஞ்சை பெருவுடையார் கோயில்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
விளக்கம்
அட்டவீரட்டர்களில் ஒருவரான காலனை உதைத்த காலாரி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சிவபெருமானை நாள்தோறும் பூஜிக்கும் 16 வயதான இளஞ்சிறான் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனை காலால் எட்டி உதைத்து காலன் மேல் வலது காலை வைத்து மிதித்து, இடதுகாலை உயர்த்தி தூக்கி உதைக்கும் நிலையில் வைத்தவாறு அவனை எச்சரிக்கும் நிலையில் அட்டவீரட்டர்களில் ஒருவரான காலாந்தகமூர்த்தி நான்கு திருக்கைகள் பெற்றுள்ளார். எமனை எச்சரிக்கும் இடது முன்கை, வியப்பு முத்திரைக் காட்டும் இடது பின் கை, பின் வலது கை சூலத்தை ஏந்தியவாறும், முன் வலது கை குறுவாளை ஓங்கியபடியும் இறைவன் கோபக்கனலாக உள்ளார். அவரின் காலடியில் காலன் வீழ்ந்துள்ளான். காலாரிக்கு அலங்கரிக்கப்பட்ட ஜடாபந்தம் எழில் சேர்க்கிறது. நீள்காதுகளில் இடதுகாது முன்கழுத்தில் வீழ்ந்துள்ளது. கழுத்தில் ஆபரணங்கள் காட்டப்பட்டுள்ளன. கால்களில் வீரக்கழல் அணிந்துள்ளார். வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. இடது தோளின் வழியே முப்புரிநூல் செல்கிறது. அரையாடை அணிந்துள்ள இறையனார் உருட்டிய விழிகளுடன் கோபக்கனலில் உள்ளவாறு காட்டப்பட்டுள்ளார். மார்க்கண்டேயன் இலிங்கத்தை அணைத்தவாறு உள்ளான். வலதுபுறம் காலன் பாசக்கயிற்றை ஓங்கியபடி ஓடி வருகிறான்.
குறிப்புதவிகள்
காலாந்தக மூர்த்தி (காலாரி)
சிற்பம்

காலாந்தக மூர்த்தி (காலாரி)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்