சிற்பம்
சந்திரன்
சந்திரன்
சிற்பத்தின் பெயர் | சந்திரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தஞ்சை பெருவுடையார் கோயில் |
ஊர் | தஞ்சாவூர் |
வட்டம் | தஞ்சாவூர் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன் |
விளக்கம்
தண்ணிலவாய் தரணியில் ஒளி உமிழும் ஒன்பது கோள்களுள் ஒருவரான சந்திரன்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிறை, கலையினன், உடுவின்வேந்தன், கலாநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயிலன்கூடு, பசுங்கதிர்த்தே ஆகிய பெயர்களைப் பெற்றுத் திகழும் சந்திரன் இரவுக்கு அதிபதியாவார். சந்திரன் இரு கலைகளைப் பெற்றவர். பாற்கடல் கடையும் பொழுது தோன்றியவர். தஞ்சை பெரிய கோயிலில் இளையராய்த் திகழும் சந்திரன் சமபாதத்தில் பீடத்தின் மீது நின்றுள்ளார். நேர் முகத்தினராய், இளமை நலம் குன்றாதவராய், கலைகள் பூரணம் பெற்று விளங்குபவராய் காட்டப்பட்டுள்ளார். இரு கைகளிலும் குவளை மலர்களை பிடித்துள்ளார். தலையின் பின்னால் ஒளி வட்டம் திகழ்கிறது. இரத்தின கிரீடம் அணிந்து, நீள் காதுகளில் பத்ரகுண்டலங்கள் திகழ, மார்பில் சரப்பளி, சவடி, மணியாரம் விளங்க, வயிற்றில் தொங்கல்களுடன் கூடிய உதரபந்தம், மார்பில் முத்தாலான முப்புரிநூல், இடையில் முகப்புடன் அமைந்த அரைப்பட்டிகையுடன் கூடிய தொடை வரையிலான அரையாடை அணிந்துள்ளார். தொடையில் இடையிலிருந்து குறங்கு செறி என்னும் இடையணி தொங்குகின்றது. இடைக்கட்டு ஆடையின் முடிச்சு இருபுறமும் காட்டப்பட்டு நீண்டு தொங்குகின்றது. கால்களில் தண்டைகளும், பாதங்களில் சதங்கையும் காட்டப்பட்டள்ளன. ஒளிக்கடவுளின் இச்சிற்பம் பண்டு வண்ணம் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சந்திரன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |