சிற்பம்

சங்க நிதி

சங்க நிதி
சிற்பத்தின் பெயர் சங்க நிதி
சிற்பத்தின்அமைவிடம் தஞ்சை பெருவுடையார் கோயில்
ஊர் தஞ்சாவூர்
வட்டம் தஞ்சாவூர்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜன்
விளக்கம்
இரு பெரும் செல்வங்கள் சங்க நிதியும்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் அளவில் பெரியதான கணத்தின் சிற்பம் ஒன்று வடபுற தேவகோட்டத்தின் கீழ் உள்ளது. கணம் அமர்ந்த நிலையில் சங்கு ஊதுகிறது. குத்துக்காலிட்டு அமர்ந்துள்ள இக்கணம் பானை வயிற்றைக் கொண்டுள்ளது. வயிற்றில் உதரபந்தம் என்னும் அணி காணப்படுகிறது. மார்பில் முப்புரிநூல், ஸ்தன சூத்திரம் அணந்துள்ளது. கைகளில் தோள் வளைகளும், முன்வளைகளும், காதில் பத்ரகுண்டலங்களும் காட்டப்பட்டுள்ளன. தலையின் சடைபாரம் சுருண்ட குழல்களாக அழகு செய்கின்றது. கருவறையிலிருந்து வெளி வரும் திருமுழுக்காட்டு நீர் வெளியேறும் பிரநாளம் எனப்படும் கோமுகியினை தன் தலையில் தாங்கிக் கொண்டு அமர்ந்துள்ளது. குபேரன் தன் சிவபக்தியால் வடதிசைக்கு அதிபதி ஆனவன். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற திருமகள் தன் செல்வத்திற்குரிய சக்திகள் அனைத்தையும் சங்கநிதி பதுமநிதி என்ற இரு கணங்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்கு பிள்ளைகளாக நியமித்துக் கொண்டார் குபேரன். குபேரனின் இருபுறமும் இவர்கள் அமர்ந்தனர். வலதுபுறத்தில் சங்கநிதியும், இடதுபுறம் பத்மநிதியும் இருப்பார்கள். சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பான். இவன் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவன். இவனது கை வர முத்திரை தாங்கி இருக்கும். மேற்சொன்ன இலக்கணப்படி இக்கணம் அமையாவிட்டாலும் சங்கநிதி போன்று உருவ அமைப்பிலும், கையில் சங்கு ஊதுவதாலும் இக்கணத்தை அவ்வாறும் கொள்ளலாம்.
குறிப்புதவிகள்
சங்க நிதி
சிற்பம்

சங்க நிதி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்