சிற்பம்

வாராகி

வாராகி
சிற்பத்தின் பெயர் வாராகி
சிற்பத்தின்அமைவிடம் குன்னாண்டார் கோயில்
ஊர் குன்னாண்டார் கோயில்
வட்டம் கீரனூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
அன்னையர் எழுவரில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள் ஒன்றான வராகமூர்த்தியின் பெண் சக்தியாக விளங்கும் வராகி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
வராகத்தைப் போன்ற (பன்றியுருவம்) முகத்தோற்றமும் மழை மேகத்தைப் போன்ற நிறத்தையுடையவர். கரண்ட மகுடந்தரித்து பவளத்தினால் ஆன ஆபரணங்கள் அணிந்திருப்பார். விஷ்ணுதர்மோத்திர புராணம் இவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் பெரிய வயிறு மற்றும் ஆறு கரங்களில், தண்டம், கட்கம், கேடகம், பாசம், அபயம், வரதம் தரித்திருக்கும் என்கிறது. வராகி பொதுவாக பழங்குடிகளின் வேளாண்மைக் கடவுளாக கருதப்படுகிறாள். வராகம் எனப்படும் பன்றி தொல்பழங்காலத்தில் மனிதர்களுக்கு பூமியை தோண்டி எவ்வாறு கிழங்கு மற்றும் கனி வகைகளை உணவாகப் பெறுவது என்பதைக் காட்டிய ஒரு முன்னோடி விலங்காகும். பன்றியின் செயலைக் கவனித்தே தொல் மனிதர்கள் பூமியைத் தோண்டி உணவைத் தேடிக் கொண்டனர். பின்பு பூமியைத் தோண்டி விதையிட்டால் அது பன்மடங்காகி வளரும் என்பதையும் அறிந்து கொண்டனர். இவ்வாறு வேளாண்மைக்கு முன்னோடியான வராகம் பெண் தெய்வ வடிவில் போற்றப்பட்டது. வராகியின் கைகளில் கலப்பை, உலக்கை ஆகிய வேளாண் கருவிகள் காணப்படும். ஆனால் பெருந்தெய்வக் கோயில்களில் கன்னியர் எழுவரில் ஒருவராகக் கொண்டு இடம் பெறும் பொழுது புராணங்களின் அடிப்படையில் அவர் விஷ்ணுவின் வராக உருவின் பெண் கூறாக இணைக்கப்பட்டாள். எனவே விஷ்ணுவிற்குரிய ஆயுதங்களை தாங்கியவளாகிறாள். இச்சிற்பத்தில் வராகி கேழல் முகத்துடன் காணப்படுகிறாள். தலையில் கரண்ட மகுடராய், கழுத்தில் மணியாரம், மார்பில் முத்துப்பட்டைகளால் ஆன முப்புரிநூல், கைகளில் தோள்வளை, முன் வளைகள், விரல்களில் வளையங்கள் ஆகியன அணிந்துள்ளார். பின்னிரு கைகளில் சங்கு, சக்கரத்தினை விரல்களில் பிடித்துள்ளார். முன் வலது கை அபய முத்திரையும், இடது முன் கை தொடையில் வைத்தவாறும், வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி பீடத்தின் மீது வைத்தவாறும் நல்லிருக்கையில் (சுகாசனம்) அமர்ந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய நீண்ட முழாடை முழங்காலுக்கு கீழ் வரை காட்டப்பட்டுள்ளது. கால்களில் சிலம்பு அணி செய்கின்றது. இடைக்கட்டின் கடி பந்தம் முன் வளைந்து பீடத்தின் மீது விழுந்துள்ளது. இடைக்கட்டின் முடிச்சு வலது பின்புறம் தொடையில் காட்டப்பட்டுள்ளது. தலையின் பின்னே ஒளிவட்டம் காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
வாராகி
சிற்பம்

வாராகி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 18
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்